'எங்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியும்' தொடர் தோல்விக்குப் பிறகும் டு ப்லெசி 1

பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம். இரு அணிகள் இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்கதேசம் 330/6 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 309/8 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.

ஆட்டத்துக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்னமும் எங்களால் இந்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. முடியாது என நினைத்தால் நான் தென் ஆப்பிரிக்க வீரனாக இருக்கமாட்டேன். அணியின் உற்சாகத்தை மீட்பது எப்படி எனப் பார்க்கவேண்டும். அடுத்த ஆட்டம் இந்தியாவுக்கு எதிராக. அவர்களுக்கு அது முதல் ஆட்டம், எங்களுக்கு மூன்றாவது ஆட்டம். தற்போதைய நிலையில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அதை எப்படி மாற்றவேண்டும் எனப் பார்க்கவேண்டும்.'எங்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியும்' தொடர் தோல்விக்குப் பிறகும் டு ப்லெசி 2

உலகக் கோப்பைப் போட்டியில் பலமான அணிகள்தான் போட்டிபோடும். அதை எதிர்கொண்டு தான் நாம் வெல்லவேண்டும். வேறு வழியில்லை. நாங்கள் துவண்டு விடமாட்டோம். அதை உறுதியாகக் கூறமுடியும்.

மிகவும் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் லுங்கி என்கிடிக்குக் காயம் ஏற்பட்டவுடன் நிலைமை மாறிவிட்டது. இதனால் 15 முதல் 20 ஓவர்களைச் சுழற்பந்துவீச்சாளர்களையும் மிதமான வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்டு முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் முதன்மையான திட்டம் போய்விட்டது. அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். இதுபோன்று விளையாடி, அதற்குச் சாக்குப்போக்குகள் சொல்லிவிடலாம் என எந்த ஒரு வீரராவது நினைத்தால் அவர்கள் சவாலைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். 'எங்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியும்' தொடர் தோல்விக்குப் பிறகும் டு ப்லெசி 3

நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பங்களாதேஷ் அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் இம்முறையும் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி சொதப்பி வருவது கிரிக்கெட் ரசிகர்களை அதிக ஏமாற்றத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *