ஃபேர்னெஸ் கிரீம் விளம்பரத்தில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நடித்தவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நடித்திருந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் என ஸ்டூவர்ட் பிராட் விராட் கோலியை கலாய்த்துள்ளார். மேலும் இருவரும் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது போல் ட்வீட் செய்துள்ளார்
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் 2-வது விக்கெட் கீப்பராக 21 வயது இளம் வீரரான ரிஷாப் பான்டுக்கு பதிலாக 33 வயதான தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது சர்ச்சையானது. ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பதில் அளித்து இருந்தார்.
Watch me and @RishabPant777 team up with @HimalayaMEN to take care of the one problem that keeps coming back. PIMPLES! #HimalayaMenPimplesGottaGo #LookingGoodAndLovingIt #VIRATxRISHABH pic.twitter.com/Pj4qetiOX1
— Virat Kohli (@imVkohli) May 16, 2019
இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வந்த கேப்டன் விராட்கோலி முதல்முறையாக தனது மவுனத்தை கலைத்து இருக்கிறார். ரிஷாப் பான்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை சேர்த்தது ஏன்? என்பது குறித்து விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது அனுபவமே முக்கிய காரணமாகும். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் அமைதியாக நிலைத்து நின்று பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர். இந்த விஷயத்தை தேர்வு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
தினேஷ் கார்த்திக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒருவேளை டோனிக்கு காயம் ஏற்பட்டு அவர் விளையாட முடியாத சூழ்நிலை உருவானால் தினேஷ் கார்த்திக்கால் விக்கெட் கீப்பிங் பணியை நன்றாக கவனிக்க முடியும். அத்துடன் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய ஆற்றலும் அவருக்கு இருக்கிறது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
2004-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆன தினேஷ் கார்த்திக் 91 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1,738 ரன்கள் எடுத்துள்ளார். 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் அந்த போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. தற்போது அவர் 2-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.
I genuinely believe @josbuttler & @benstokes38 would be excellent ambassadors for this brand. Please contact @phoenixmg3. ?
— Stuart Broad (@StuartBroad8) May 16, 2019