15 பந்துகளில் அரை சதம் ! கெய்லை மிஞ்சிய நரேன் ! வீடியோ நினைப்பு
நேற்று நடைபெற்ற 46 லீக் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதின.இதில் சுனில் நரேன் பெங்களூரு அணி பந்து வீச்சுகளை தொம்சம் செய்து குறைத்த பந்துகளில் அரைசதம் அடித்து, இந்த ஆண்டு ஐ.பி.எல் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இல் முதல் இடம் பிடித்தார்.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.இதில் அதிக பட்சமாக மந்தீப் சிங்க் 52 ரன்களும் ஹெட் 75 ரன்களும் அடித்தார்கள்,மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.கொல்கத்தா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும் சுனில் நரின் 2 விக்கெட்களும் ஒக்ஸ் 1 விக்கெட்களும் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி முதல் ஓவரில் இருந்தே பெங்களூரு அணி பந்துகளை நரேனும் கிறிஸ் லின்னும் ஜோடி சேர்ந்து பட்டாயா கிளப்பினார்கள்.சுனில் நரைன், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ஆடினார். அதில் அவர் அடித்த ஒரு சில ஷாட்கள் கெய்ல் போன்றே இருந்தது.
இதில் அவர்17 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதமடித்த என்ற பெருமையை பெற்றார்.
சுனில் நரைன் 15 பந்தில் இந்த அரைசதத்தை கடந்துள்ளார். இவரைத் தொடர்ந்து யூசப் பதானும் 15 பந்துகளில் அடித்துள்ளார்.சுரேஷ் ரெய்னா 16 பந்துகளிலும் மற்றும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 17 பந்துகளிலும் அடித்துள்ளனர்.
இதன் மூலம் கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.பெங்களூரு அணி 5 புள்ளிகள் மற்றுமே எடுத்து பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது.