ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின். இவர் கடந்த 2015ல், உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த 2016ல் இந்தியா ‘ஏ’, மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்ற ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் துணைப்பயிற்சியாளராக செயல்பட்டார். தொடர்ந்து கடந்த 2017ல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார் ஹாடின்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை பயிற்சியாளராக பிராட் ஹாடினை நியமித்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இவர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் பேலிசுடன் இணைந்து செயல்படுவார் என தெரிவித்துள்ளது. 41வயதான ஹாடின் சர்வதேச அளவில் 66 டெஸ்டில் பங்கேற்று 3,266 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, 126 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ள ஹாடின், 3,122 ரன்கள் அடித்துள்ளார்.
We welcome Brad Haddin as the Assistant Coach of SunRisers Hyderabad.#OrangeArmy #RiseWithUs pic.twitter.com/XqEn8Y10LX
— SunRisers Hyderabad (@SunRisers) August 19, 2019
மேலும்,

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாக் காலிஸும் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கடிச்சும் சமீபத்தில் விலகினார்கள். இந்நிலையில் கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக 37 வயது பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். மெக்கல்லம், கேகேஆர் அணிக்காக 5 வருடங்கள் விளையாடியுள்ளார். 2009-ல் கேப்டனாகவும் இருந்துள்ளார். சமீபத்தில், அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மெக்கல்லம்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கேகேஆர். பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது.எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடம் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போய்விட்டது.
37 வயதான மெக்கல்லம் 2015ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வழிநடத்தினார். இதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது நியூசிலாந்து.