இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி அடிலேய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது.
வங்கதேச ஆணி ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. அணியின் முன்னணி வீரர் சௌமியா சர்க்கார் வெளியில் அமர்த்தப்பட்டு, சரிஃபுல் அஸ்லாம் உள்ளே வருகிறார். இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து விளையாடுகிறார். மேலும் தீபக் ஹூடா வெளியில் அமர்த்தப்பட்டு, அக்சர் பட்டேல் மீண்டும் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.
நேருக்கு நேர்:
இதுவரை டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியதில் இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியை தழுவியது இல்லை. ஒட்டுமொத்தமாக 11 முறை இந்த இரு அணிகளும் டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் டெல்லியில் நடைபெற்ற ஒரு போட்டியில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்திய அணியின் கை ஓங்கி இருக்கிறது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் விபரம்:
கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி ஹர்ஷதீப் சிங்
இன்றைய போட்டியில் களமிறங்கும் வங்கதேச அணி வீரர்கள் விபரம்:
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சரிஃபுல் அஸ்லாம், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், நூருல் ஹசன், யாசிர் அலி, முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது.