இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வருபவர் சுரேஷ் ரெய்னா. தற்போது இந்த வருடத்தின் ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார். இந்த வேலையில் அவருக்கு கிடைத்த சரியான் அவாய்ப்பை பயன்படுத்திகொண்டு அவர் சற்று சோபித்தால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பலாம்.
மேலும், இந்திய ஒருநாள் அணியில் 4ஆவது விக்கெட்டில் இறங்கும் மிடில் ஆடர் பிரச்சனை கடந்த ஒரு வருடமாக இருக்கிறது. அந்த இடத்திற்கு லொகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் மற்று கேதார் ஜாதவ என அடுத்தடுத்து வீரர்களை தேர்வு செய்து வருகிறது இந்திய அணி.
இவர்களின் தினேஷ் கார்த்திக் மட்டும் ஓரளவிற்கு தேருகிறார். ஆனால், அவரும் இன்னும் அந்த இடத்திற்கு உறுதி செய்யப்படவில்லை. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி ரஞ்சி கோப்பையில் சில அரை சதங்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பாலாம். அதே நேரத்தில் 4ஆவது விக்கெட் இடமும் அணியில் வழுப்பெறும்.
ஆனால், ரஞ்சிக் கோப்பைத் தொடரில் உத்திர பிரதேச அணியின் கேப்டனான சுரேஷ் ரெய்னா மீண்டும் சொதப்பியுள்ளார். மேலும், இந்த வருட ரஞ்சி கோப்பையில் மூன்றாவது லீக் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
டெல்லிக் அணிக்கு எதிரான போட்டியில் உத்திர பிரதேச கேப்டனாக இறங்கினார். 157 ரன்னிற்க்கு 3 விக்கெட் இழந்திருந்தது உத்திரபிரதேச அணி. அப்போது இறங்கிய கேப்டன் சுரேஷ் ரெய்னா வெரும் பத்து ரன்னில் பார்ட் டைம் ஸ்பின்னர் மிலிந் குமார் பந்தில் தனது ஸ்டம்பை இழந்தார்.
இதுவரை இந்த வருட ரஞ்சி கோப்பை தொடரில் இந்து ஆட்டங்கலில் 50 ரன் மட்டுமெ அடித்துள்ளார். மேலும் இந்த வருட ரஞ்சி கோப்பை தொடரில் 8 லீக் போடிகளுக்கு பதிலாக 6 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெறும். அந்த வகையில் பார்த்தால் ஏற்கனவே மூன்று போட்டிகளில் சொதப்பிவிட்டார் ரெய்னா. இன்னும் மூன்று போட்டிகளில் சில் அரை சதங்கலை அடித்தால் ஒழிய அவர் யோ-யோ தேர்விற்கு அழைப்படுவார்.