ரஞ்சி டிராபி: உ.பி. அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டன்

ரஞ்சி டிராபி தொடக்க ஆட்டத்தில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி. முதல் ஆட்டத்தில் ரெயில்வேஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்தவர் சுரேஷ் ரெய்னா. சமீப காலமாக இந்திய அணியில் இடம் பிடிக்க திணறி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா தொடரில் அவர் விளையாடவில்லை.

இந்திய அணியில் இடம் கிடைக்காததால் துலீப் டிராபியில் விளையாடினார். தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் நிலையில் நாளை ரஞ்சி டிராபி தொடங்குகிறது.

இதில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். நாளை தொடங்கும் முதல் போட்டியில் உத்தர பிரதேசம் ரெயில்வே அணியை எதிர்த்து விளையாடுகிறது.

உத்தர பிரதேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சுரேஷ் ரெய்னா (கேப்டன்), 2. ஷிவம் சவுத்ரி, 3. ஹிமான்ஷு அஸ்னோரா, 4. ரிங்கு சிங், 5. அக்ச்தீப் நாத், 6. ஏக்லாவ்யா திவேதி, 7. உமாங் ஷர்மா, 8. அல்மாஸ் ஷயுகாட், 9. சவுரப் குமார், 10. ஷீஷன் அன்சாரி, 11. தீபெந்த்ரா பாண்டே, 12. அங்கித் ராஜ்புட், 13. பிரவீண் குமார், 14. கார்த்திக் தியாகி, 15. இம்தியாஸ் அகமது, 16. ஐஸ்ரர் ஆசிம், 17. த்ருவ் பிரதாப் சிங்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.