தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சுரேஷ் ரெய்னா விளையாடவுள்ளார்

தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விளையாட உள்ளனர். இந்த தகவலை சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் உறுதி படுத்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் இல்லாத குறையை போக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டிஎன்பிஎல் தொடரை கடந்த ஆண்டு ஆரம்பித்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு இந்தப் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, கிராமப்புற வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது. இதில் விளையாடிய நடராஜன் உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஒருகாலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராய் இருந்தார். அவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு மும்பையில் தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடினார். அதன் பிறகு அவரை அணியை விட்டு தூக்கி எறிந்தனர். மீண்டும் 2016-இல் நியூஸிலாந்துக்கு எதிராக அணியில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை. மீண்டும், அவரை அணியை விட்டு தூக்கினர். இதனுடன், அவர் உள்ளூர் போட்டிகள் மற்றும் ரஞ்சி போட்டிகளிலும் விளையாடவில்லை. பிறகு விஜய் ஹசாரே ட்ரோபி மற்றும் சயீத் முஷ்டாக் அலி ட்ரோபியிலும் விளையாடவில்லை. இதனால், அவரை பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து தூக்கினர்.

இந்நிலையில் இந்த வருட போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த சுரேஷ் ரெய்னா , யூசுப் பதான், பியூஸ் சாவ்லா, சாஹல் உட்பட சில வீரர்கள் விளையாடுகிறார்கள். கடந்த ஐபில் போட்டியில் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், திண்டா, உன்முக்த் சந்த், மனோஜ் திவாரி, மனன் வோரா உட்பட சில தெரிந்த வீரர்களும் விளையாட இருக்கின்றனர்.

‘தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இருந்து 80 வீரர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 24 வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு அணியிலும் மூன்று வெளிமாநில வீரர்கள் இடம்பிடிப்பார்கள்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.