இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பிர் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று தந்துள்ளனர், அதுமட்டும் இல்லாமல் 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் கவுதம் கம்பிர் தான்.
இந்த கிரிக்கெட் போட்டியில் மூன்று விதமான போட்டிகளும் வேறு கட்டத்தை தொட்டுவிட்டதால், தனது பார்மை இழந்தார் கவுதம் கம்பிர். இதனால், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி அந்த இடத்தை நிரப்பினார்கள்.
கவுதம் கம்பிர் எந்த நேரத்திலும் எதையும் விட்டு கொடுக்க மாட்டார். இந்திய அணிக்காக இருந்தாலும் சரி, இந்தியன் பிரீமியர் லீக் என்றாலும் சரி வெற்றி பெறும் வரை போராடிக்கொண்டே இருப்பார். இதனால், அவர் ஆக்ரோஷத்துடன் தோற்றமளிப்பார்.
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி சந்தித்த சிறந்த தொடக்கவீரர்களுள் ஒருவர் தான் கவுதம் கம்பிர். 2008-11 காலங்களில் விரேந்தர் சேவாக்குடன் சேர்ந்து எதிரணியின் பந்துவீச்சை நொறுக்கினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன் அடித்த 12வது இந்தியன் என்ற பெருமையை பெற்ற கவுதம் கம்பிரை வாழ்த்த அனைவரும் ட்விட்டர் வந்தார்கள்.
அந்த நேரத்தில் இந்திய அணியின் இன்னொரு அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பிரை வாழ்த்தினார்.
“உங்களின் உற்சாகமூட்டும் ஆற்றல் எப்போதும் மற்றவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பீர்கள். இது இனிய பிறந்தநாளாய் அமையட்டும்,” என சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்.