நெ.4 இடம் தோனிக்குத்தான் சரியாக பொருந்தும்: சுரேஷ் ரெய்னா 1

இந்தியாவின் அணியில் நான்காவது இடத்தில் ஆடை தோனிதான் மிகவும் பொருத்தமானவர் என முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது கடந்த இரண்டு போட்டிகளாக அவர் அற்புதமாக ஆடி உள்ளார்.

அவர் கடைநிலை வீரர்களுடன் அற்புதமாக ஆடும் திறமை படைத்தவர் நான்காவது இத்தில் ஆட்டத்தை சரியாக முடித்துக் கொடுக்கும் வல்லமை படைத்தவர். மேலும் அவரை சுற்றி அடுத்தடுத்து பல வீரர்களை அவர் அறிவிப்பார் என்று கூறினார் சுரேஷ் ரெய்னா.

நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி மற்றும் தவான் ஆட்டத்தால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நெ.4 இடம் தோனிக்குத்தான் சரியாக பொருந்தும்: சுரேஷ் ரெய்னா 2
India’s Kuldeep Yadav (R), Yuzvendra Chahal (front L) and wicketkeeper Mahendra Singh Dhoni (C) celebrate after New Zealand’s Lockie Ferguson was stumped during the first one-day international 

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், சாஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 10 ஓவர் முடிந்த நிலையில் சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் அரைசதம் அடிக்க, இந்தியாவின் ஸ்கோர் 132 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நெ.4 இடம் தோனிக்குத்தான் சரியாக பொருந்தும்: சுரேஷ் ரெய்னா 3
ADELAIDE, AUSTRALIA – JANUARY 26: MS Dhoni of India bats during game one of the Twenty20 International match between Australia and India at Adelaide Oval on January 26, 2016

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்தியா 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், அம்பதி ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

6 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் வருகிற 26-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *