ரசலுக்கு பதிலாக சிட்னி தண்டர்ஸ் அணிக்கு டி வில்லியர்ஸ் விளையாடலாம்

ஆஸ்திரேலியாவில் நடக்கப்போகும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் விளையாடலாம் என தகவல் வந்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரசல் 12 மாதத்திற்கு கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக டி வில்லியர்ஸ் வருவார் என தகவல் வந்தது.

மார்ச் மாதத்தில் இருந்து 12 மாதத்திற்கு கிரிக்கெட் விளையாடக்கூடாது என ரஸ்ஸலுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதனால், இவருக்கு பதிலாக இயான் மோர்கன், டி வில்லியர்ஸ் ஆகியோர் அந்த அணிக்காக விளையாடலாம் என தகவல்கள் வந்தன.

இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடாத டி வில்லியர்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளது. இதனால், அவர் நெருக்கடி இல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடுவார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ், அந்த அணியின் தூணாக இருக்கிறார். இதனால் அவருக்கு இந்தியாவில் அதிக ரசிகர்கள் உண்டு.

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் அந்த அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கார்லோஸ் ப்ராத்வெய்ட், சிட்னி தண்டர்ஸ் அணியில் இடம் பெறலாம் என தகவல்கள் வந்தன.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.