மீண்டும் சொதப்பிய சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்கு திரும்புவது சந்தேகம்

மீண்டும் சொதப்பிய சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்கு திரும்புவது சந்தேகம்

இந்திய அணியால் கைவிடப்பட்ட மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ரெய்னா மீண்டும் மீண்டும் சொதப்பி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் ஓரளவிற்கு ரன் சேர்த்தால் மட்டுமே இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ள நிலையில் தொடர்ந்து ரன் அடிக்க திணறி வருகிறார்.

தற்போது இந்தியாவின் உள்ளூர் டி20 தொடராக சையத் முஷ்டாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உத்திர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா இருந்து வருகிறார். இந்திய அணிக்கு திரும்ப அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இவர் ஓரளவிற்கு ஆடினால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புகள் இருந்தது. ஏனெனில் கடினமான உடல் தகுதி தேர்வான யோ-யோ தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டார் ரெய்னா.

இதனால் இனி சில அரை சதங்கள் அடித்தால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிவிடலாம் என்ற ஒரு எளிதான வாய்ப்புகள் அவர் கையில் இருந்தது. அதனையும் தாண்டி உத்திரபிரதேச அணியின் கேப்டனாகவும் இருக்கிறார் ரெய்னா.

இந்த வருடத்திற்கான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் முதல் போட்டியில் உத்திரபிரதேச அணி ராஜஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணிக்காக ஒப்பனர்கள் சாம்ராத் சிங் மற்றும் ஏகலைவ திரிவெடி ஆகியோர் களம் இறங்கினார்.

இருவரும் 10.1 ஓவர்களுக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தனர். ஒரு விக்கெட் விழவே, அடுத்ததாக கேப்டன் சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். அதிரடியாக ஆட வேண்டிய சூழலில் ரெய்னா சொதப்பினார். இதனால் 15 பந்துகளில் வெறும் 13 ரன் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக 20 ஓவர்களுக்கு 146 ரன் அடுத்தது உத்திர பிரதேச அணி. அதன் பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவரில் இந்த ரன்னை கடந்த வெற்றி வாகை சூடியது.


இந்த தொடரில் இன்னும் சில போட்டிகள் மீதம் உள்ளது. அதன் போட்டிகளில் ஒருசில அரை சதங்கள் அடித்து தனது பார்மை நிரூபித்தால் தென்னாப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்கு ரெய்னா தேர்வு செய்யப்படலாம். மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இவரை தக்க வைத்துள்ளது. இதனால அந்த பிரச்சனையும் ரெய்னாவிற்கு இல்லை. இதன் காரணமாக அழுத்தம் இல்லாமல் ஆடி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி அவரது ரசிகர்களை மகிழ்விப்பார் என நம்பலாம்.

Editor:

This website uses cookies.