சையத் முஷ்டாக் அலி கோப்பை : பரோடா அணியில் யூசப் பதான் இல்லை
இந்த வருடத்திற்கான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான பரோடா அஜியின் யூசப் பதான் பெயர் இடம் பெறவில்லை. ஊக்க மருந்து உட்கொண்டது தொடர்பாக யூசப் பதானுக்கு 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை ஜனவரி மாதம் 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தும் பரோடா அணியில் யூசப் பதான் சேர்க்கப்படவில்லை.
இந்த தடை வித்துக்கப்படவுடன் பதானை இந்த டி20 தொடரில் தேர்வு செய்ய வேண்டாம் என பிசிசிஐ பரோடா கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக்கொண்டது. இதன் காரணமாக யூசப் பதான் தற்போது அந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

மேலும், வரும் ஐ.பி.எல் தொடரை மையமாக வைத்து இந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சரியாக ஆடினால் ஒரு ஐ.பி.எல் அணியில் இடம் பிடிக்க போராடி வந்தார் யூசப் பதான். தற்போது அந்த கணவு வீணாகியுள்ளது. மேலும் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகள் நடைபெறும் ஐ.பி.எல் ஏலத்தில் தனது அடிப்படை விலையை 75 லட்சமாக நிர்ணயித்திருந்தார் பதான். உள்ளூர் டி20 போட்டியில் ஆட தேர்வு ஆகததால் அவருடைய ஐ.பி.எல் கனவு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் யூசப் பதானின் தம்பி இர்பான் பதானுக்கு நோ அப்ஜசன் சான்றிதழை வழங்கிவிட்டது பரோடா கிரிக்கெட் வாரியம். இதனால் அவர் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தற்போது டி20 ஜோனல் லீக்கில் பரோடா அணியை தீபக் ஹூடா வழிநடத்தி வருகிறார். இர்பான் ஓத்தான் அணிக்கு திரும்பும் பட்சத்தில் யார் அணியை காலீ நடத்துவார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவாளாக உள்ளனர்.