ஷார்ஜாவில் இன்று 10 ஓவர்கள் கொண்ட டி10 கிரிக்கெட் லீக் நடைபெற இருக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2007-ல் டி20 கிரிக்கெட் உருவானது.
இந்நிலையில் 10 ஓவர்கள் கொண்ட டி10 லீக் தொடர் இன்று ஷார்ஜாவில் தொடங்குகிறது. இதில் மரதா அரேபியன்ஸ், கேரளா கிங்ஸ், பாக்டூன்ஸ், பஞ்சாபி லிஜென்ட்ஸ், டீம் ஸ்ரீலங்கா, பெங்கால் டைகர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த 6 அணியும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவில் உள்ள அணிகள் தலா இரண்டு முறை மோதவேண்டும். லீக் போட்டிகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
மரதா அரேபயின்ஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா கிங்ஸ் அணிக்கு மோர்கனும், பாக்டூன்ஸ் அணிக்கு அப்ரிடியும், பஞ்சாபி லிஜென்ட்ஸ் அணிக்கு சோயிப் மாலிக்கும், டீம் ஸ்ரீலங்கா அணிக்கு சண்டிமலும், பெங்கால் டைகர்ஸ் அணிக்கு சர்பிராஸ் அஹமதும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி10 போட்டிகள் ஒலிம்பிக் தொடருக்கான சரியானது. ஐ.சி.சி. ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்றால், அதற்கு 10 ஓவர் போட்டிதான் சரியானது. கால்பந்து போட்டியை போல் ஒன்றரை மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்’’ என்று சேவாக் கூறியிருந்தார். இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் மோர்கனும் 10 ஓவர் போட்டிக்கு ஆதரவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.