யாரும் எதிர்பார்க்காத வீரருக்கு இடம்… சிவம் துபே சந்தேகம்; உலகக்கோப்பை தொடருக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்த விரேந்திர சேவாக் !!

யாரும் எதிர்பார்க்காத வீரருக்கு இடம்… சிவம் துபே சந்தேகம்; உலகக்கோப்பை தொடருக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்த விரேந்திர சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக், ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அவரது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் துவங்க உள்ளது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்பட இருப்பதால், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பேசும் முன்னாள் வீரர்கள் பலர், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, உலகக்கோப்பை தொடருக்கான தங்களது இந்திய அணியையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக்கும், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அவரது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ள விரேந்திர சேவாக், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார். பினிசராக ரிங்கு சிங் அல்லது சிவம் துபே ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கொடுக்கலாம் என தெரிவித்துள்ள சேவாக், சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோருக்கு தனது அணியில் இடம் கொடுத்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சந்தீப் சர்மாவிற்கு தனது அணியில் இடம் கொடுத்துள்ளார். சஞ்சு சாம்சன், மாயன்க் யாதவ் போன்ற வீரர்களுக்கு சேவாக் தனது அணியில் இடம் கொடுக்கவில்லை.

விரேந்திர சேவாக் தேர்வு செய்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ரிங்கு சிங்/சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ராஹ், முகமது சிராஜ், சந்தீப் சர்மா.

Mohamed:

This website uses cookies.