இந்தியான்னு சொன்னாலே இனிமே இவர்தான்; அது விராட் கோலி இல்லை – ஜாம்பவான் கபில் தேவ் கருத்து!

குமார் யாதவ் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக உருவெடுப்பார் என்று யாருமே நினைக்கவில்லை என சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார் கபில் தேவ்.

இந்திய அணிக்கு மிக முக்கியமான பேட்ஸ்மேனாக உருவெடுத்து இருப்பவர் சூரியகுமார் யாதவ். குறிப்பாக 2022 ஆம் ஆண்டு இந்திய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றது என்றால்  அதற்கு இவரது பங்களிப்பு முக்கிய காரணம்.

23 போட்டிகளில் 800 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். ஒவ்வொரு தொடரிலும் தவறாமல் அரைசதம் அடித்து வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சதம் விலாசினார். உலக கோப்பையிலும் பல்வேறு அணிகளால் கவனிக்க கூடிய வீரராக இருக்கிறார்.

இந்த வருடம் உலக கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இவர் இருப்பார் என்று இந்திய அணியின் ஜாம்பவான் கபில் தேவ் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் இவரை ஒதுக்கி விட்டு இந்தியாவை பற்றி பேச முடியாது என்று கூறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

“சூரியகுமார் யாதவ் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக இருப்பார் என்று எவரும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம். தனது அபாரமான பேட்டிங் மூலம் உலகை திரும்பி பார்க்க வைத்து பேச வைத்திருக்கிறார்.”

“தற்போது இந்திய அணியின் பேட்டிங்கை இவரை ஒதுக்கி வைத்து விட்டு பேச முடியாது. மிகப்பெரிய தாக்கத்தை இந்த உலக கோப்பையில் ஏற்படுத்துவார். அதுவும் விராத் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்களுடன் சேர்ந்து இவர் அபாரமாக விளையாடினால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். வரும் போட்டிகளில் இவரது தாக்கம் எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் .

நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் சூரியகுமார் யாதவ் 10 பந்துகளில் 15 ரன்கள் அடித்து துரதிஷ்டவசமாக முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் வீரர்கள் இவரது விக்கெட் விழுந்தபின் கொண்டாடிய விதத்தை வைத்தே நாம் கூறிவிடலாம் இவர் எவ்வளவு அபாயகரமான வீரர் என்று. வரும் போட்டிகளில் இவரது பங்களிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Mohamed:

This website uses cookies.