கிரிஸ் கெய்ல் தான் டி20யின் சிறந்த வீரன் - கே.எல் ராகுல் புகழாரம் 1

இந்திய நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் கிரிஸ் கெய்ல் குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். மேலும், அவர் தான் டி20யின் சிறந்த வீரர் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது,

எங்கள் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை இது ஏமாற்றமான தொடர். நாங்கள் ‘பிளே-ஆப்’ சுற்றில் நெருக்கமாகத் தோற்றோம். ஆனால் தனிப்பட்ட முறையில், பேட்டிங்கில் எனக்கு மிகச் சிறப்பான தொடர் இது. நான் நன்றாக, எனது இயற்கையான ஆட்டத்தை ஆடினேன். நாங்கள் இயல்பாக ஆடுவதற்கு சேவாக் தொடர்ந்து ஊக்குவித்தார். முதல் போட்டியிலிருந்து நாங்கள் அதைத்தான் செய்தோம்.

கிரிஸ் கெய்ல் தான் டி20யின் சிறந்த வீரன் - கே.எல் ராகுல் புகழாரம் 2
Lokesh Rahul of KXIP and Chris Gayle of KXIP during match thirty two of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Delhi Daredevils and the Rajasthan Royals held at the Feroz Shah Kotla Ground, Delhi on the 2nd May 2018.
Photo by: Rahul Gulati /SPORTZPICS for BCCI

பஞ்சாப் அணியின் உரிமையாளர்களும் என் மீது நம்பிக்கை வைத்து அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருந்தார்கள். அந்தத் தொகைக்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஒட்டுமொத்தமாக எனது பேட்டிங் எனக்கு மிகவும் திருப்தி அளித்தது.

கிறிஸ் கெய்ல் ஓர் அற்புதமான வீரர், இதுவரையிலான 20 ஓவர் போட்டி வீரர்களிலேயே சிறந்தவர். பெங்களூரு அணியிலும், தற்போது பஞ்சாப் அணியிலும் கெய்லுடன் இணைந்து ஆடியவகையில் நான் அதிர்ஷ்டசாலி.
நாங்கள் அவரைத் தேர்வு செய்தபோது பலரும் புருவம் உயர்த்தினார்கள், ஆனால் தன் மீதான பிறரின் சந்தேகங்களை அவர் தகர்த்துவிட்டார்.

கிரிஸ் கெய்ல் தான் டி20யின் சிறந்த வீரன் - கே.எல் ராகுல் புகழாரம் 3
Chris Gayle – Player of the Match: “I’m always determined. I always give it my all for whatever franchise I represent. I’m a 100 percent. Like I said, it’s a new franchise. A lot of people might say that Chris has a lot to prove – he didn’t get selected or wasn’t picked early in the auction. I think Virender Sehwag has saved IPL by picking me.

இந்த ‘யுனிவர்ஸ் பாசிடம்’ இருந்து கற்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன, குறிப்பாக அவர் விளாசும் சிக்சர்களில். கெய்லுடன் இணைந்து பேட்டிங் செய்ததும், அணிக்கு அதிரடியான தொடக்கம் தந்ததும் மறக்க முடியாதவை. களத்துக்கு வெளியே பார்ட்டி, கொண்டாட்டம் என்று தூள் கிளப்புபவர் அவர்.

என கெய்ல் குறித்து புகழ்ந்து பேசினார் கே.எல் ராகுல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *