CSK ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்! நிறைவேறப்போகும் 8 ஆண்டு தவம்! 1

கடந்த 8 ஆண்டுகளாக திறக்கபடாமல் இருக்கும் மூன்று கேலரிகளுக்கும் அனுமதி தரக்கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகளையும் திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.CSK ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்! நிறைவேறப்போகும் 8 ஆண்டு தவம்! 2

இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், அரசிடம் உரிய முறையான அனுமதி ஏதும் பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி அவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி, 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.

2013-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் கேலரி பிரச்சினையை தீர்க்க தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவரை விடிவு கிடைத்தபாடில்லை. இந்நிலையில்தான் தற்போது அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 13-வது பதிப்பிற்காக காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது.CSK ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்! நிறைவேறப்போகும் 8 ஆண்டு தவம்! 3

வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்பட இருந்த IPL போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BCCI வட்டாரங்களின்படி, கொரோனா வைரஸ் தொற்று IPL 2020 மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இதனால் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் இதுவரை 47 பேர் கொரோனா வைரஸால் பாதித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக IPL 2020 போட்டியை ஒத்திவைக்க முடியுமா? ஒரு கேள்விக்கு பதிலளித்த BCCI வட்டாரங்கள், “IPL தொடங்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *