ஒழுங்கீனச் செயல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை இந்தியாவுக்குத் திரும்பும்படி பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அரசின் கட்டளையின்படி நீர் சேமிப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பரம் ஒன்றில் நடிக்கவேண்டியிருந்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியத்தைத் தொடர்பு கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதிகாரிகளிடம் கண்டபடி பேசிய இந்திய அணியின் முக்கிய உறுப்பினர்: நாடு திரும்ப அழைத்த பிசிசிஐ! பதவி காலி 1
A board functionary confirmed the development and said that it would be interesting to see if he is now also barred from contesting for the position of manager — the appointment is set to happen by the end of this month.

இதனால் டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூத்த அதிகாரி, சுனிலைத் தொடர்புகொண்டு இந்த விளம்பரத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டபோது, குறுஞ்செய்திகளைக் கொட்டவேண்டாம் என்று பதில் அளித்துள்ளார் சுனில். கோலி மற்றும் ரோஹித் சர்மா நடித்த நீர் சேமிப்பு விளம்பரப் படப்பிடிப்புக்குத் தேவையான ஒத்துழைப்பை சுனில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சுனிலின் ஒழுங்கீனச் செயல் குறித்து பிசிசிஐக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தன் மீதான புகாருக்குப் பிறகு தூதரக அதிகாரிகளிடம் தன்னுடைய செயலுக்கு சுனில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளிடம் கண்டபடி பேசிய இந்திய அணியின் முக்கிய உறுப்பினர்: நாடு திரும்ப அழைத்த பிசிசிஐ! பதவி காலி 2
“He was emboldened because no action was taken on account of earlier misdemeanours and only because there is heat on Rai that action is being taken this time.

எனினும் ஏற்கெனவே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளின்போது சுனிலின் சில நடவடிக்கைகள் மீது பிசிசிஐக்கு அதிருப்தி இருந்துள்ளது. இதனால் தற்போதைய புகாரின் காரணமாக சிஓஏ தலைவர் வினோத் ராயின் ஆணைப்படி, சுனில் மே.இ. தொடரிலிருந்து நீக்கப்பட்டு உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு வினோத் ராயைச் சந்தித்து தன்னுடைய செயலுக்கு அவர் விளக்கம் அளிக்கும்படியும் கட்டளையிடப்பட்டுள்ளது. • SHARE

  விவரம் காண

  முடிந்ததா கோலியின் சகாப்தம்! 21 போட்டிகளில் சதமே இல்லை, டி20யில் 9வது இடம்! இன்னும் பல

  கிறைஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சோகம்...

  முக்கிய பந்துவீச்சாளர் காயம்! டெஸ்ட் தொடரில் இருந்து முற்றிலும் விலகல்!

  இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கையில்...

  வீடியோ: 5 மாதத்திற்குப் பின் வந்து 4 சிக்சர்களை விரட்டிய ஹர்திக் பாண்டியா!

  காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டர் பணியில் அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்...

  டெஸ்ட் கிரிக்கெட் இல்லைனா இது இல்ல…! இத விட்ராதிங்கடா பசங்களா! அட்வைஸ் செய்யும் முதுபெறும் மனிதர் ரிச்சர்ட் ஹாட்லி!

  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் டி20 போட்டிகள் நிலைத்து நிற்காது என்று நியூஸிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர்சர் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம்...

  வீடியோ: கிரிக்கெட் ஆடாத சமயத்தில் விவசாயியாக மாறிய தோனி!

  ராஞ்சியில் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை நிலத்தில் விதைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக...