கோஹ்லி படையின் குணத்தால் இந்தியாவின் ரசிகரான தென் ஆப்ரிக்கா டிரைவர்
இந்திய கிரிக்கெட் வீரர்களின் மரியாதையான அனுகுமுறையால் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரர், இந்திய அணியின் ரசிகராகவே மாறியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
எங்கு சென்றாலும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு பெரும்பாலும் தரை வழி போக்குவரத்தையே விரும்பும் இந்திய அணி நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் வீரர்களும் விரும்புகின்றனர்.
இது வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திடம் கலந்துரையாடுவதற்கும், இணைக்கமாக இருக்கப்பதற்கும் தரை வழி போக்குவரத்து உதவியாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே பெரும்பாலும் இந்திய அணி, தரை வழி போக்குவரத்தை தேர்வு செய்கிறது.
தற்போது தென் ஆப்ரிக்காவிலும், ஒரு மைதானத்தில் இருந்து மைதானத்திற்கு செல்ல பேருந்திலேயே பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின், நற்குணத்தையும், ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதையும் பார்த்து, தென் ஆப்ரிக்காவை சேர்ந்து பேருந்து ஓட்டுநர் ஒருவர் இந்திய அணியின் ரசிகராகவே மாறிவிட்டார்.
ஆண்ட்ரீயூ என்னும் அந்த ஓட்டுநர் தான், இந்திய வீரர்கள் பயணிக்கும் சொகுசு பேருந்தை இயக்கி வருகிறார். கடந்த சில தினங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஒன்றாகவே பயணித்து வரும் இவர், இந்திய கிரிக்கெட் வீரர்களின் தற்பெருமை இல்லாத குணத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், தன்னை ஒரு டிரைவராக இந்திய வீரர்கள் வழிநடத்த வில்லை என்றும், அவர்களில் ஒருவராக என்னையும் கருதி எனக்கு மிகப்பெரும் மரியாதை கொடுக்கின்றனர். இந்திய வீரர்களின் இந்த குணம் எனக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அந்த ஓட்டுநர்.