டி20 போட்டியில் பவுண்டரிகளிலே அதிக ரன் அடித்த அணிகள்

Cricket, India, Sri Lanka, Most runs in Boundaries

ஒரே டி20 போட்டியில் பவுண்டரிகளிலே அதிக ரன் அடித்த அணிகள் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் தான் இருக்கிறது, இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. டி20 போட்டியில் பவுண்டரிகளிலே அதிக ரன் அடித்த அணிகளை பார்ப்போம்.

தென்னாபிரிக்கா – 178 vs இங்கிலாந்து, 2009

டி20 போட்டியில் பவுண்டரிகளிலே அதிக ரன் அடித்த அணிகள் 1டி20 போட்டியில் பவுண்டரிகளிலே அதிக ரன் அடித்த அணிகள் 1

2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா அணி 241 ரன் அடித்தது. அந்த போட்டியில் தென்னாபிரிக்கா வீரர்கள் 19 பவுண்டரி மற்றும் 17 சிக்ஸர்கள் விளாசினார்கள். இதன் மூலம் அந்த அணி பவுண்டரிகளிலே 178 ரன் சேர்த்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா – 184 vs இலங்கை, 2016

2016ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த அணி என்ற பெருமையை பெற்றது. 263 ரன் அடித்த அணி பவுண்டரிகளில் மட்டுமே 184 ரன் அடித்தது, அதில் 25 பவுண்டரி மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆஸ்திரேலியா – 184 vs இங்கிலாந்து, 2013

Aaron Finch of Australia bats during the 3rd One Day International between India and Australia held at the Holkar Stadium in Indore on the 24th September 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

2013ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 248 ரன் சேர்த்தது. 19 பவுண்டரி மற்றும் 18 சிக்ஸர்கள் விளாசிய ஆஸ்திரேலிய அணி பவுண்டரிகளில் மட்டுமே 184 ரன்கள் சேர்த்தது.

இலங்கை – 186 vs கென்யா, 2007

2007ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக 260 ரன் அடித்து சாதனை படைத்தது இலங்கை அணி. அந்த போட்டியில் 30 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர் விளாசிய இலங்கை அணி பவுண்டரிகளில் மட்டுமே 186 ரன்களை சேர்த்தது.

இந்தியா – 210 vs இலங்கை, 2017

2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர்கள் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார்கள். இந்த போட்டியில் 21 பவுண்டரி மற்றும் 21 சிக்ஸர்கள் விளாசிய இந்திய அணி பவுண்டரிகளில் மட்டுமே 210 ரன்னை எடுத்தது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!
whatsapp
line