நீங்க என்ன டீம்ல எடுத்தாலும் சரி… எடுக்கலேனாலும் சரி.. ஆனா இத மட்டும் பன்னிடுங்க; பிசிசிஐ.,க்கு கண்டிசன் போட்ட ரோஹித் சர்மா !!

நீங்க என்ன டீம்ல எடுத்தாலும் சரி… எடுக்கலேனாலும் சரி.. ஆனா இத மட்டும் பன்னிடுங்க; பிசிசிஐ.,க்கு கண்டிசன் போட்ட ரோஹித் சர்மா

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்ற விவாதம் குறித்தான ரோஹித் சர்மாவின் நிலைப்பாடு தற்போது தெரியவந்துள்ளது.

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இந்திய அணியை மிக சிறப்பாகவே வழிநடத்தி வருகிறார். பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இந்திய அணிக்கான தனது வேலையை ரோஹித் சர்மா சரியாகவே செய்து வருகிறார்.

கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரை விராட் கோலியின் தலைமையின் கீழ் எதிர்கொண்ட இந்திய அணி, டி.20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து கோப்பையையும் இழந்தது. இதன்பின் தான் ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை மிக இலகுவாக கைப்பற்றிய இந்திய அணி, 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பையையும் இலகுவாக கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போராட கூட முடியாமல் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒரு முறை கோப்பையை தவறவிட்டது.

இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால், முன்னாள் கேப்டனான விராட் கோலி சந்தித்த அதே பிரச்சனைகளையும், விமர்ச்சனங்களையும் தற்போது ரோஹித் சர்மாவும் சந்தித்து வருகிறார். அடுத்த உலகக்கோப்பை தொடர் நடைபெறும் போது ரோஹித் சர்மாவிற்கு கிட்டத்தட்ட 40 வயதாகிவிடும் என்பதால் தற்போதே இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறார். ரோஹித் சர்மா ஏற்கனவே டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டதால் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்ற குழப்பம் அதிகமாக நிலவி வருகிறது.

டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, தொடர்ச்சியாக காயமடைந்து வருவதாலும், ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து தற்போது வரை முழுமையாக குணமடையாததாலும் டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பிசிசிஐ.,க்கு ஒரு கண்டிசன் போட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ., வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, அடுத்த கேப்டன் யார் என்பதை முடிவு செய்வதற்காக நடத்தபட்ட ஆலோசனை கூட்டத்தில், ரோஹித் சர்மா பிசிசிஐ., நிர்வாகிகளிடம், “டி.20 உலகக்கோப்பை தொடரில் என்னை கேப்டனாக தேர்வு செய்வதாக இருந்தாலும், இல்லை புதிதாக ஒரு கேப்டனை நியமிக்க விரும்பினாலும், அதை தற்போதே கூறிவிடுங்கள். தொடர்ந்து இழுத்தடிக்க வேண்டாம்” என்ற கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.