டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை: இந்திய அணிக்கு பாதிப்பா? 1

கொரோனா வைரஸ் தாக்கம் முதல் முறையாக நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் பாதிக்கும் என தெரிகிறது. இதன் ஃபைனலை ஒத்திவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு துவங்கி முதல் முறையாக வரும் 2021 வரை நடக்கவுள்ளது. இத்தொடரின் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் 2021 ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ஃபைனலில் விளையாடும்.

2010 முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அடித்தளம் கடந்த 2010ல் துவங்கியது. ஐசிசி.,யின் மினி உலகக்கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பதிலாக கடந்த 2013ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் கைவிடப்பட்டு, ஒருநாள் போட்டியாகவே நடத்தப்பட்டது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை: இந்திய அணிக்கு பாதிப்பா? 2
CHRISTCHURCH, NEW ZEALAND – FEBRUARY 29: Prithvi Shaw of India celebrates his half century during day one of the Second Test match between New Zealand and India at Hagley Oval on February 29, 2020 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து 2017ம் ஆண்டில் இத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போதும் நடைமுறை சிக்கல் இருந்ததால், 2019 – 2021ம் ஆண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டில் இந்த தொடர் துவங்கியது. இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

 

தற்போது சர்வதேச அளவில் அதிபயங்கரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஒலிம்பிக் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனலையும் ஒத்திவைக்கும் திட்டத்தில் ஐசிசி உள்ளதாக தெரிகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை: இந்திய அணிக்கு பாதிப்பா? 3
WELLINGTON, NEW ZEALAND – FEBRUARY 23: Tim Southee of New Zealand celebrates with teammates after taking the wicket of Mayank Agarwal (L) of India during day three of the First Test match between New Zealand and India at Basin Reserve on February 23, 2020 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

 

இதுதொடர்பாக ஐசிசி அதிகாரி ஒருவர் கூறுகையில்,“தற்போதைக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்த அனைத்து மாற்று வழிகளையும் யோசித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *