இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தவான் 41 (42) ரன்கள் எடுத்தார். ரிஷாப் பந்த் 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். சவுமியா சர்கார் 39 (35) ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Photo by Prashant Bhoot / Sportzpics for BCCI
வங்கதேசம் அணியின் அனுபவ வீரர்கள் தமிம் இக்பால், ஷாகிப் அல்ஹசன் ஆகிய இரு வீரர்கள் இல்லாத சூழலில் வங்கதேச வீரர்கள் பெற்ற இந்த வெற்றி அவர்களுக்கு உரித்தான, தகுதியான வெற்றிதான், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு இருந்த பந்துவீச்சு, பிரிக்க முடியாத அளவுக்கு இருந்த வலுவான பேட்டிங் பார்ட்னர்ஷிப் போன்றவை வெற்றியை வங்கதேசத்துக்கு எளிதாக்கின.
குறிப்பாக அனுபவ வீரர் முஷிப்குர் ரஹ்மானின் அரைசதம் வங்கதேசத்தின் வெற்றிக்கு வித்திட்டது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இவர் கணக்கில் 8 பவுண்டரி, ஒருசிக்ஸர் அடங்கும். இந்திய அணிக்கு எதிராக முதலாவது டி20 அரை சதத்தையும் முஷ்பிகுர் அடித்தார். துணையாக ஆடிய சவுமியா சர்க்கார், அறிமுக வீரர் நயிம் ஆகியோரின் பங்களிப்பும் பேட்டிங்கில் குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது.
பந்துவீச்சில் 8 வீரர்களை வங்கதேச கேப்டன் மகமதுல்லா பயன்படுத்தியது வியப்பாகப் பார்க்கப்பட்டாலும், பந்துவீச்சில் வித்தியாசத்தைக் காண்பித்து இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குத் தள்ளினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் ஆசிப் ஹூசைன் 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
சர்வதேச அளவில் இந்திய அணி வலிமையாக இருந்தாலும், வங்கதேச அணியைக் குறைத்து மதிப்பிட்டதற்கான பலனை நேற்று பெற்றது. இன்னும் கத்துக்குட்டி அணி என்று நினைக்கக்கூடாது என்பதற்கான பாடத்தை இந்திய அணிக்கு வங்கதேச அணியினர் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை 148 ரன்கள் என்பது தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு, வெற்றி பெறும் ஸ்கோர் எனச் சொல்ல முடியாது. நல்ல தரமான ஆடுகளங்களில் இதுபோன்ற ஸ்கோர் செய்தால் ஆட்டம் 15 ஓவர்களில் முடிந்திருக்கும். டெல்லி ஆடுகளத்தின் நிலைமை வேறு.வ்