ஹைதராபாத்தில் சன் ரைசர்ஸூடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய போட்டி கிரிக்கெட் ரசிகர்கர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் ராயுடு, ரெய்னா, தோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாக் 183 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இதனையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் துவக்கத்தில் விக்கெட்டுகளை சரிய விட்டாலும் கேப்டன் வில்லியம்சன், யூசப் பதான் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் ஆட்டத்தை ஹைதராபாத் பக்கம் கொண்டு வந்தனர்.
எனினும் முக்கிய கட்டத்தில் இருவரும் ஆட்டமிழக்க, கடை ஓவருக்கு 19 ரன்கள் ஹைதராபாத்துக்கு தேவைப்பட்டது.
இறுதி ஓவரை பிராவோ வீச ராஷித்கான், சாஹா களத்தில் இருந்தனர். முதல் மூன்று பந்துகளை சரியாக பயன்படுத்த சன் ரைசர்ஸ் வீரர்கள் கடைசி இரண்டு சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
ராஷித்கான் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்ததால் ஆட்டத்தில் பரப்பரப்பு உண்டானது கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் வெற்றி ஹைதராபாத்திடம், என்ற நிலையில் பிராவோ சிறப்பாக வீச, 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
கடை ஓவரில் நான்காவது பந்தில் ராஷித் கான் சிக்ஸ்ர் விளாசியதும், சென்னை கேப்டன் தோனி பிராவோவிடம் சென்று சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். தோனி பெரும்பாலும் பந்துவீச்சாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடமாட்டார் என்பதால் இது தொடர்பாக போட்டி வர்ணணையாளர்கள் உட்பட பலரும் தோனி என்ன கூறியிருப்பார் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆட்டம் முடிந்ததும் தோனியிடம் சஞ்சய் மஞ்ரேக்கர், நீங்கள் பந்துவீச்சாளர்களிடம் ஆலோசித்து பார்த்ததில்லையே? என்று கேள்வி எழுப்பினார்.
![சன் ரைசர்ஸூடன் மோதல்: கடைசி ஓவரில் பிராவோவிடம் என்ன கூறினார் தோனி? 4 சன் ரைசர்ஸூடன் மோதல்: கடைசி ஓவரில் பிராவோவிடம் என்ன கூறினார் தோனி? 4](https://tamil.sportzwiki.com/wp-content/uploads/2018/01/145355693.jpg)
அதற்கு தோனி, “அது இரண்டு சகோதரர்களுக்கு இடையேயானது. நாங்கள் என்ன ஆலோசித்தோம் என்று என்னால் தங்களிடம் கூற முடியாது. பந்துவீச்சில் அவரது முடிவை சற்று மாற்றுமாறு கூறினேன். சில நேரங்களில் பிராவோ போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களுக்கும் சிறிய அறிவுரை தேவைப்படுகிறது” என்று கூறினார்.