சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. சுஷாந்தின் மரண செய்தி வரும் ஒரு நொடிக்கு முன்பு வரை கொரோனாவின் கொடிய தாக்கத்தை கூட மீம்ஸ்களாக போட்டு நெட்டிசன்களை குதுகலமாக வைத்திருந்த மீம் கிரியேட்டர்களே சுஷாந்த் சிங்கின் மரணத்தை கண்டு திகைத்து, தங்களது ஆதங்கங்களையும், வேதனையும் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்;
யாரோ ஒரு ஹிந்தி நடிகருக்காக தமிகழ இளைஞர்களே இவ்வளவு வேதனைப்படுவது ஏன் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழலாம், இந்தி திரையுலகையும் தாண்டி அவர் பேசப்படுவதற்கு ஒரே ஒரு காரணம் என்றால் “தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி” என்ற முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தது மட்டும் தான்.
பீகார் மாநிலத்தில் 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி பிறந்த சுஷாந்த் சிங் தனது 22 வயதில் இருந்து சின்ன திரை, வெள்ளித்திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்த சுஷாந்த் அந்த ஒரு திரைப்படத்திற்காகவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதார்ஷ் நாயகனான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சுஷாந்த் தோனியாக நடிக்கவில்லை தோனியாகவே வாழ்ந்தார் என்பது இன்று வரை யாராலும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
தோனியின் வெற்றி பயணத்தை மட்டும் அல்லாமல், தோனி பட்ட அவமானங்களையும், கஷ்டங்களையும் தத்ரூபமாக திரையில் நடித்து காட்டிய சுஷாந்த் சிங் அந்த ஒரே படத்தின் மூலம் மிகப்பெரும் உயரத்தையும் எட்டினார்.
முக அமைப்பில் சிறிது வேறுபட்டிருந்தாலும், அத்திரைப்படத்தில் நிஜ தோனியை நேரில் கண்டவாறு இருந்தது சுஷாந்த் சிங்கின் நடிப்பு. ஓர் கிரிக்கெட் வீரனுக்காக, இந்தியாவில் வெளியிடும் முதல் திரைப்படம். அட்டகாசமாக இருந்தது.
அத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைய காரணம், சாதிக்க துடிக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அத்திரைப்படத்தில் அமைந்திருந்த சில வசனங்கள் என்பதை மறுக்க முடியாது. தன்னம்பிக்கையின் மறு உருவமே தோனி தான் என்று ரசிகர்களே சொல்லும் அளவிற்கு அத்திரைப்படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் திடீரென தனது உயிரை தானே மாய்த்து கொண்டது தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.
இந்தியாவின் சிறப்பு கிரிக்கெட் வீரர்களின் பயிற்சியில் அயராது உழைத்தார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டனையும் செய்தார். தோனியை போன்று, தோணியாகவே நின்று திரையில் காரியத்தை செய்தார்.
ஓர் சாகப்தத்தை திரையில் நிகழ்த்த வேண்டுமெனில், அச்சாகாப்தத்தின் அங்கமாக இருத்தல் வேண்டும். இவர், அதனை தாண்டி, தோனியாக திரையில் வாழ்ந்து, திரையுலகில் இவருக்கென சகாப்தம் ஒன்றை உருவாக்கினார்.
நீ இறந்தாலும், எப்போதும் நீவீர் செய்த சம்பவம் வரலாற்றில் நிச்சயம் இடம் பெரும். உனது ஆத்மா சாந்தியடைய நாங்கள் இறைவனை வணங்குவோம்.