சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடந்த போட்டியில் தன்னந்தனி ஆளாக நின்று கடைசிவரை போராடினார்.
இந்த போட்டியின் போது அவ்வப்போது அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவருக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது. இந்த காரனத்திற்காகத்தான் தோனி இன்றைய போட்டியில் ஆடமால் ரெய்னாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்,
இது குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியதாவது…
அவருக்கு சென்னை அணி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தற்போது ஓய்வு எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன். உலக கோப்பை தொடரில் அவர் கண்டிப்பாக ஆடுவார் என்று கூறியுள்ளார் மைக் ஹசி.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் தோனி இல்லை என்பதால், அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 2வது போட்டி இதுவாகும்.
ஏற்கெனவே கடந்த 15வது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்து 170 ரன்கள் குவித்தது. அதை எதிர்த்து விளையாடிய சென்னை அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால் இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என சென்னை திட்டமிட்டுள்ளது. அதேசமயம் மும்பை அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்தப் போட்டியில் வென்று புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தை பிடிக்க வேண்டும், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
இதற்கிடையே சென்னை மற்றும் மும்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்றைய போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.