JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை நடத்தினார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மொகாலியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்! 1

அங்கு திடீரென்று வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ராகுல் டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட மணிஷ் பாண்டே, ஸ்ரேயா ஸ் ஐயர், குணால் பாண்ட்யா, ரிஷாப், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகியோர் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள னர். அவர்களிடமும் ராகுல் டிராவிட் உரையாடினார். ரவி சாஸ்திரியுடன் ராகுல் டிராவிட் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிசிசிஐ, இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பெருமைக்குரியவர் கள் சந்திக்கும்போது…’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளது.

இந்நிலையில்,

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் கம்பீர் கூறியதாவது:இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்! 2

ஒரு கேப்டனாக இன்னும் கோலி நீண்டதூரம் செல்லவேண்டும். உலகக் கோப்பை அவருக்கு நல்லவிதமாக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அவரால் வெற்றிகரமான கேப்டனாக இருக்கமுடிவதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான்.

ஐபிஎல் போன்ற போட்டிகளில் உங்களுடைய தலைமைப்பண்பு சோதிக்கப்படும். ஏனெனில் அப்போதுதான் இதர வீரர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். நான் மிகவும் உண்மையாக இருக்கிறேன், இதைச் சொல்லும்போது. மும்பை இந்தியன்ஸுக்காக ரோஹித் சர்மாவும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக தோனியும் சாதித்துள்ளதைப் பாருங்கள். அத்துடன் ஆர்சியின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார். • SHARE
 • விவரம் காண

  16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்….! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ்

  சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இந்திய...

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்!

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய அணியின் முன்னாள்...

  அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ… கவலையில் குல்தீப் யாதவ்

  தோனி கீப்பிங் செய்யும்போது பீல்டர்களை எங்கு நிற்கவைப்பது என்ற கவலை எனக்கு இருந்ததே இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்...

  வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா!

  விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! விராட்கோலி சொன்ன சேலஞ்சை செய்து முடித்து, வீடியோ ஒன்றை...

  இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்!

  இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்த...