என்ன ஆனாலும் சரி… ஆஸ்திரேலிய அணியால் இவரை மட்டும் சமாளிக்க முடியாது.. இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுக்க போவது இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !!

என்ன ஆனாலும் சரி… ஆஸ்திரேலிய அணியால் இவரை மட்டும் சமாளிக்க முடியாது.. இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுக்க போவது இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா, இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என முன்னாள் இங்கிலாந்து வீரரான கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.

சமபலம் கொண்ட இரு அணிகள் இறுதி போட்டியில் மோத உள்ளது, இறுதி போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரரான கிரேம் ஸ்வான், இறுதி போட்டியில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிரேம் ஸ்வான் பேசுகையில்,  “ஆஸ்திரேலிய அணியுடனான உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் எக்ஸ் பேக்டராக இருப்பார் என நான் நம்புகிறேன். ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்து சரியாகவே செய்து வருகிறார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருப்பதாலும், தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதாலும் ரவீந்திர ஜடேஜாவால் இந்த தொடரில் பேட்டிங்கில் பெரிதாக தனது பங்களிப்பை செய்ய முடியவில்லை. ரவீந்திர ஜடேஜா போன்ற மேட்ச் வின்னர்களால் எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும் கையாள முடியும். இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அஹமதாபாத் ஆடுகளத்தில் தான் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டியும் அதே அஹமதாபாத் ஆடுகளத்தில் தான் நடைபெற உள்ளது, எனவே தான் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.