மும்பை அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான சர்பராஸ் கான் நான்கு போட்டிகளில் முச்சதம், இரட்டை சதம், சதம் என விளாசி பிரமிக்க வைத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான். 2016-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற 50 உலக கோப்பை தொடரில் பங்கேற்றவர். இவர் மும்பை அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 16 வயதே ஆகும்.

தொடக்க காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் 2019-2020 ரஞ்சி டிராபி தொடக்கத்தில் மும்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. நான்கு போட்டிகளுக்குப் பின் ஐந்தாவது போட்டியில் கர்நாடகாவிற்கு எதிராக களம் இறங்கினார். முதல் இன்னிங்சில் 8 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 71 ரன்களும் அடித்தார். தமிழ்நாடு அணிக்கெதிராக 36 ரன்கள் சேர்த்தார்.முச்சதம், இரட்டை சதம் தற்போது சதம்! இந்திய அணியின் கதவை தட்டும் இளம் வீரர்! 1

அதன்பின் உத்தர பிரதேசம் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் முச்சதம் அடித்து 301 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்த போட்டியில் இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 226 ரன்கள் விளாசினார். அதன்பின் நடைபெற்ற சவுராஷ்டிரா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 78 ரன்களும், 2-வது இன்னிங்சில் 25 ரன்களும் அடித்தார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய மத்திய பிரதேசம் அணிக்கெதிராக முதல்நாள் ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் 169 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் நான்கு போட்டிகளில் மூன்று மிகப்பெரிய இன்னிங்சை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு போட்டிகளில் இதுவரை 799 ரன்கள் குவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் ஏ மற்றும் பி பிரிவில் நடைபெற்றுவரும் 9-ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகம்-செளராஷ்டிரா அணிகள் விளையாடி வருகின்றன.முச்சதம், இரட்டை சதம் தற்போது சதம்! இந்திய அணியின் கதவை தட்டும் இளம் வீரர்! 2

இரு அணிகளுக்கு இடையே புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் தமிழக அணி ‘டாஸ்’ வென்று பேட்டிங்கைத் தோ்வு செய்தது. இதையடுத்து, விளையாடிய தமிழக அணி, முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரரான அபினவ் முகுந்த் 112 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து உனத்கட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனாா். எல்.சூா்யபிரகாஷ் (10 ரன்கள்), கெளசிக் காந்தி (17 ரன்கள்), கங்கா ஸ்ரீதா் ராஜு (13 ரன்கள்), கேப்டன் பாபா அபராஜித் (20 ரன்கள்) ஆகியோா் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா்.

விக்கெட் கீப்பா் என்.ஜெகதீஷன் 61 ரன்களுடனும், எம். முகமது 1 ரன்னுடன் களத்தில் உள்ளனா். • SHARE

  விவரம் காண

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு !!

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே நடக்கவுள்ள டி20...

  உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணி அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் !!

  உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே...

  இவர் சொதப்பியதே தோல்விக்கு காரணம்: முண்ணனி வீரரை கைகாட்டும் சஞ்சய் மாஜரேக்கர்

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய...

  வீடியோ: பவுண்டரி லைனில் பிரம்மாண்ட கேட்ச் பிடித்த டு ப்லெசிஸ் மற்றும் மில்லர்!

  தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது...

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...