முதல் டெஸ்டில் இந்திய அணியின் பவுலிங் சுமார்; உண்மையிலேயே எங்களது தோல்விக்கு காரணம் இதுதான் – ப்ரெஸ் மீட்டில் வெளிப்படையாக பேசிய ஆஸி., கோச்!

முதல் டெஸ்டில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் இந்திய அணியின் பவுலிங் இல்லை, எங்களுடைய அலட்சியமான பேட்டிங் என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஷான் டெய்ட்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி மூன்றாம் நாள் முடிவிற்குள்ளேயே ஆஸ்திரேலியா அணியை சுருட்டி விட்டது. இறுதியாக இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியையும் பதிவு செய்தது.

முதல் இன்னிங்சில் ஜடேஜா ஐந்து விக்கெட்களும் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை 177 ரன்களுக்குள் சுருட்டினர். அதன்பிறகு முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 120 ரன்கள் அடித்தார். கீழ் வரிசையில் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜடேஜா 70 ரன்களும் அக்சர் பட்டேல் 84 ரன்களும் அடித்தனர். இதனால் 400 ரன்கள் இந்திய அணியால் எட்ட முடிந்தது.

அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சரித்தார். இவர் ஐந்து விக்கெட்டுகளும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றி வேலையை முடித்தனர். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டதால் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி சாத்தியமானது.

இந்நிலையில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்ததால் வெற்றி பெற்றார்கள் என கூற முடியாது. ஆனால் எங்களது பேட்ஸ்மென்கள் முனைப்பு காட்டாமல் அலட்சியமாக பேட்டிங் செய்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஷான் டெய்ட். அவர் பேசியதாவது:

“உண்மையில் இந்த மைதானம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது. டர்ன் மற்றும் பவுன்ஸ் ஒன்றும் பெரிதாக இல்லை. பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். ரோகித் சர்மா மற்றும் அவர்களது பேட்ஸ்மேன்கள் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த ஒரு வித்தியாசம் மட்டுமே எங்களுக்கும் இந்திய அணிக்கும் இருந்தது.

3 நாளில் ஆட்டம் முடிந்ததால், மைதானத்தின் முழு தன்மையை பார்க்கமுடியாமல் போய்விட்டது. வெறுமனே சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானமாக இது தெரிந்துவிட்டது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. நாங்கள் பேட்டிங்கில் ஈடுகொடுத்து விளையாடவில்லை.” என்றார்.

Mohamed:

This website uses cookies.