இப்படி மெதுவாக ஆடி, தோனி மற்ற பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறார் – கம்பிர்
தோனி மிக மெதுவாக ஆடுவதால அணியில் உள்ள மற்ற வீரகளுக்குத் தான் அழுத்தம் ஏற்படும் ரண கூறியுள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர்.
தோனியின் ஆட்டம் தனது மோசமான ஆட்டத்தை நினைவுப்படுத்தியதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
கடந்த போட்டியில் தோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்றைய ஆட்டத்தில் 42 ரன்கள் எடுத்தார். வழக்கமாக 2 ரன்களை அசால்ட்டாக ஒடியே எடுக்கும் தோனி நேற்றைய போட்டில் சோர்ந்திருந்தார்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி, 59 பந்துகளில் 37 ரன் அடித்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய தோனி, அதிரடியாக ஆடாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தோனியின் இந்த ஆட்டம் தன்னுடைய மோசமான ஆட்டத்தை நினைவுப்படுத்தியதாக கவாஸ்கர் கூறியுள்ளார். 1975ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி 335 ரன் என்ற இமாலய வெற்றி இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. அப்போது களமிறங்கிய துவக்க வீரர் கவாஸ்கர், 174 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த ஆட்டம் தற்போது வரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்டமாக இருந்து வருகிறது.

இதனை நினைவுகூர்ந்த கவாஸ்கர், “தோனியின் போராட்டம் புரிந்துகொள்ளக்கூடியவை. அவர் ஸ்கோர் எடுக்க முடியாத சூழ்நிலையில் களமிறங்கினார். அப்போது வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பட்சத்தில், நம் சிந்தனையும் எதிர்மறையாக இருக்கும். அந்த சமயம் நல்ல ஷாட்கள் அனைத்தும் பீல்டரிடம் செல்ல, அழுத்தம் மிகவும் அதிகமாகும். இதனால் களத்தில் போராடிய தோனி, எனது பிரபலமற்ற இன்னிங்ஸை நினைவுப்படுத்தினார்” என்றார்.
மேலும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா இடம் பெறாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கவாஸ்கர் தெரிவித்தார். இவர்கள் இருந்திருந்தால், இங்கிலாந்து அணியின் இமாலய ஸ்கோரை கட்டுப்படுத்தியிருப்பார்கள் என அவர் கூறினார்.