கடும் நெருக்கடிக்கு இடையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய விதம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராத் கோலி 114 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் எடுத்தனர். போட்டிக்குப் பின் பேசிய விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்தார்.

அவர் கூறும்போது, ’’போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து ஸ்ரேயாஸ் ஆடியவிதம் அருமையாக இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் துணிச்சலாக அவர் ஆடினார். அவரது ஆட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார். தொடர்ந்து அணிக்காக அவர் சிறப்பாக ஆடுவது நம்பிக்கை அளிக்கிறது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடி, அணியை வெற்றி பெற செய்வதில் கவனம் செலுத்துவேன். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை தான் ஸ்ரேயாஸ் செய்திருக்கிறார்.வெற்றியின் பங்களிப்பு இவருக்குத்தான் அதிகம் : இளம் வீரரை புகழும் விராட் கோலி 1

நெருக்கடிக்கு இடையில் அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. நீங்கள் யார், உங்கள் ஆட்டம் என்ன, நீங்கள் என்ன மாதிரியான வீரர் என்பதை உணர்ந்து ஆட வேண்டியது முக்கியம். அந்த வகையில் ஸ்ரேயாஸ் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். நான் தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் அடித்தது பற்றி கேட்கிறீர்கள். அணியின் டாப் 3 வீரர்கள் ஸ்கோரை உயர்த்த வேண்டும். நான் எனக்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு ஆடினேன். அதற்காக பெருமை கொள்கிறேன்’’ என்றார்.

 

ஆஃப் ஸ்பெயினில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. பலத்த மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம், பின்னர் மழை நின்றதும் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

மே.இ.தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில், எவின் லெவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் தனது 54-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.  10-ஆவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின் 114 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.வெற்றியின் பங்களிப்பு இவருக்குத்தான் அதிகம் : இளம் வீரரை புகழும் விராட் கோலி 2

25 ரன்கள் எடுத்திருந்த ஷிம்ரனை போல்டாக்கினார் ஷமி. அவருக்கு பின் ஜடேஜா பந்தில் 24 ரன்களுடன் ஷாய் ஹோப்பும் போல்டானார்.
3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் அதிரடியாக ஆடி 30 ரன்களை குவித்து பூரணும், கேப்டன் ஹோல்டர் 14, பிராத்வெயிட் 16 ரன்களுடனும் வெளியேறினர். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களுடன் இருந்தது மே.இ.தீவுகள்.
பேபியன் ஆலன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள்.

255 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அணியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக ரோஹித் சர்மா 10, ஷிகர்தவண்36, விராட் கோலி 114, ஷ்ரேயஸ் ஐயர்65, கேதார் ஜாதவ் 19 என ரன்களை எடுக்க 32.3 ஓவரில் 256 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.வெற்றியின் பங்களிப்பு இவருக்குத்தான் அதிகம் : இளம் வீரரை புகழும் விராட் கோலி 3

இந்திய-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தி இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது. • SHARE

  விவரம் காண

  முடிந்ததா கோலியின் சகாப்தம்! 21 போட்டிகளில் சதமே இல்லை, டி20யில் 9வது இடம்! இன்னும் பல

  கிறைஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சோகம்...

  முக்கிய பந்துவீச்சாளர் காயம்! டெஸ்ட் தொடரில் இருந்து முற்றிலும் விலகல்!

  இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கையில்...

  வீடியோ: 5 மாதத்திற்குப் பின் வந்து 4 சிக்சர்களை விரட்டிய ஹர்திக் பாண்டியா!

  காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டர் பணியில் அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்...

  டெஸ்ட் கிரிக்கெட் இல்லைனா இது இல்ல…! இத விட்ராதிங்கடா பசங்களா! அட்வைஸ் செய்யும் முதுபெறும் மனிதர் ரிச்சர்ட் ஹாட்லி!

  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் டி20 போட்டிகள் நிலைத்து நிற்காது என்று நியூஸிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர்சர் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம்...

  வீடியோ: கிரிக்கெட் ஆடாத சமயத்தில் விவசாயியாக மாறிய தோனி!

  ராஞ்சியில் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை நிலத்தில் விதைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக...