கடும் நெருக்கடிக்கு இடையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய விதம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராத் கோலி 114 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் எடுத்தனர். போட்டிக்குப் பின் பேசிய விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்தார்.
அவர் கூறும்போது, ’’போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து ஸ்ரேயாஸ் ஆடியவிதம் அருமையாக இருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் துணிச்சலாக அவர் ஆடினார். அவரது ஆட்டத்தில் அவர் உறுதியாக இருந்தார். தொடர்ந்து அணிக்காக அவர் சிறப்பாக ஆடுவது நம்பிக்கை அளிக்கிறது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடி, அணியை வெற்றி பெற செய்வதில் கவனம் செலுத்துவேன். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை தான் ஸ்ரேயாஸ் செய்திருக்கிறார்.
நெருக்கடிக்கு இடையில் அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. நீங்கள் யார், உங்கள் ஆட்டம் என்ன, நீங்கள் என்ன மாதிரியான வீரர் என்பதை உணர்ந்து ஆட வேண்டியது முக்கியம். அந்த வகையில் ஸ்ரேயாஸ் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார். நான் தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் அடித்தது பற்றி கேட்கிறீர்கள். அணியின் டாப் 3 வீரர்கள் ஸ்கோரை உயர்த்த வேண்டும். நான் எனக்கான பொறுப்பை எடுத்துக்கொண்டு ஆடினேன். அதற்காக பெருமை கொள்கிறேன்’’ என்றார்.
ஆஃப் ஸ்பெயினில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. பலத்த மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம், பின்னர் மழை நின்றதும் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
மே.இ.தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில், எவின் லெவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் தனது 54-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 10-ஆவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின் 114 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.
25 ரன்கள் எடுத்திருந்த ஷிம்ரனை போல்டாக்கினார் ஷமி. அவருக்கு பின் ஜடேஜா பந்தில் 24 ரன்களுடன் ஷாய் ஹோப்பும் போல்டானார்.
3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் அதிரடியாக ஆடி 30 ரன்களை குவித்து பூரணும், கேப்டன் ஹோல்டர் 14, பிராத்வெயிட் 16 ரன்களுடனும் வெளியேறினர். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களுடன் இருந்தது மே.இ.தீவுகள்.
பேபியன் ஆலன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள்.
255 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அணியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக ரோஹித் சர்மா 10, ஷிகர்தவண்36, விராட் கோலி 114, ஷ்ரேயஸ் ஐயர்65, கேதார் ஜாதவ் 19 என ரன்களை எடுக்க 32.3 ஓவரில் 256 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தி இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது.