உண்மை என்னவென்று தெரியாமல் எதையும் சொல்ல முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் பிரச்னை இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. உலகக் கோப்பை தொடரின் போது இந்த பிரச்னை அதிகமானதாகவும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இது வெளிப் படையாகத் தெரிந்தது என்றும் கூறப்பட்டது. அப்போது வீர்ர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளி யிட்டனர்.
விராத் வெளியிட்ட புகைப்படத்தில் ரோகித்தும், ரோகித் வெளியிட்ட புகைப்படத்தில் விராத்தும் இல்லாததால், மோதல் உண்மைதான் என்று கூறப்பட்டது. ஆனால், களத்தில் இருவரும் நன்றாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

இந்த மோதல் குறித்து வீரேந்திர சேவாக் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ’ ஒரு குடும்பத்தில் நான்குபேர் இருந்தால், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதும் வெளியில் செல்ல வேண்டும் என்பதும் அவசியமில் லை. ஆனால், விழாவில் எல்லோரையும் பார்க்க முடியும். விராத் கோலியும் ரோகித்தும் ஒன்றாக சாப்பிடச் செல்லவில்லை என்பதால் அவர்களுக்கு பிரச்னை என்று சொல்லிவிட முடியாது.
அவர்கள், அதுபற்றி சொல்லாதவரை, அல்லது அதற்கான ஆதாரம் இல்லாதவரை, எதையும் சொல்ல முடியாது. எனக்கும் தோனிக்கும் கூட சண்டை இருந்தது என்று கூறினார்கள். ஆனால், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. இது போன்ற தகவல்களை யார் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கோலிக்கும் ரோகித்தும் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய,
ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவை கிரிக்கெட்டை விட பெரிய நிகழ்வுகள் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. இந்த தடகள வீரர்களை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதாவது இவர்களுக்கு நல்ல உணவு, ஊட்டச்சத்து, பயிற்றுநர்கள், உடற்கோப்பு மருத்துவர்கள் ஆகியவை தேவை என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு.
ஆனால் இவர்களை சந்தித்து இவர்களை அறியும் போதுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு என்னவெல்லாம் வசதிகள் கிடைக்கின்றன, ஆனால் அதில் 10%, 20% கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லையே என்பதை உணர்ந்தேன், இவர்கள் இதற்கு மேலும் தகுதியானவர்கள், ஏனெனில் இவர்கள் இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுட் தருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையிலும் பயிற்சியாளர்கள் பெரிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் நாங்கள் பயிற்சியாளர்களுக்கு அதற்குரிய பெருமையை அளிக்க மாட்டோம், நாம் நம்முடனேயே வைத்துக் கொண்டிருப்போம்.