வீட்டிக்குள்ளேயே முடங்கியிருக்காமல் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு முதல் அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் தொற்றும், உயிரிழப்புகளும் நம்மை அதிக அளவில் கவலை கொள்ள வைக்கிறது.
பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நாட்டு தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை இந்நோய். கொரோனா காலத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு சேவை செய்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் இருக்கின்றேன். இது மிகுந்த வலி கொண்டதாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக நான் கொரோனா நோயுக்கு ஆளாகியுள்ளேன். விரைவாக மீண்டு வர உங்களின் பிரார்த்தனைகள் தேவை என்று அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.
இந்த கொரோனா காலத்தில், வீட்டிக்குள்ளேயே முடங்கியிருக்காமல் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு முதல் அனைத்து தேவைகளையும் கொடுத்து உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் தான் இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் அப்ரிடிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்ரிடி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்க இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தைப் பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை. வங்கதேசம் குறித்து நினைவிருக்கிறதா?” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சலாம் கிரிக்கெட் 2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவுதம் கம்பீர், கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும். அப்ரிடியுடன் தனக்கு அரசியல் ரீதியான கருத்து மாறுபாடு உண்டு என்றாலும், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்தார்.