தற்போது முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது: டீன் ஜோன்ஸ் 1

டெஸ்ட் தொடரில் ஆஸி. அணியை இப்போது இந்திய அணி ஜெயிக்காவிட்டால், எப்போதும் வெல்ல முடியாது என்று ஆஸி. அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸி. அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை.

ஆனால், இந்த முறை ஆஸி. அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் அந்த அணி இருப்பது பலவீனமான அணியாகப் பார்க்கப்படுகிறது. ஆதலால், இந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைக்க வாய்ப்புள்ளது என்று முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

தற்போது முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது: டீன் ஜோன்ஸ் 2

இந்நிலையில் இதே கருத்தை ஆஸி. அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸும் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வெளிவரும் தி சிட்னி ஹெரால்டு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் அவர்கூறியதாவது:

”தற்போதுள்ள ஆஸி. அணியை வலிமை இழந்த அணியாகவே பார்க்கிறேன். இந்திய அணியை தோற்கடிக்கும் அளவுக்கு ஆஸி. அணிக்குத் திறமை இல்லை. ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸி. அணி பலமிழந்த அணியாக உள்ளது.

இந்திய அணி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்காவிட்டால், அதன்பின் எப்போதும் தொடரை வெல்ல முடியாது. ஆஸி. அணியைக் காட்டிலும் இந்த முறை வந்துள்ள அணி சிறப்பாக உள்ளது. ஆனால் வீரர்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்.தற்போது முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது: டீன் ஜோன்ஸ் 3

இந்த ஆண்டில் இந்திய அணி வெளிநாட்டுப் பயணத்தில் சிறப்பாகச் செயல்படாவிட்டாலும் கூட எனக்கு இந்திய அணி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் வெல்வார்கள் என்று நம்புகிறேன். அதேசமயம், இந்த முறை ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வெல்லும் என்று நான் நம்பவில்லை. ஆஸி. அணி மீது நம்பிக்கையும் இல்லை.

வழக்கமாக, உள்நாட்டில் விளையாடும்போது ஆஸி. அணியை வெல்வது கடினமானது. ஆனால், தற்போது ஸ்மித், வார்னர் இல்லாமல் அணி களமிறங்குகிறது. இவர்கள் இருவரும் ஆஸி. அணியின் 40 சதவீத ரன்களைச் சேர்த்துவிடும் திறமைசாலிகள். ஆனால், இந்த முறை அவ்வாறு விளையாடக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்.

 

ஆஸி. அணி என்றாலே ஸ்லெட்ஜிங் இருக்கும் என்றுதான் கிரிக்கெட் உலகில் பேசப்படுகிறது. ஆனால், ஆக்ரோஷமான கிரிக்கெட் வேண்டும் என்று கூட பல முன்னாள் வீரர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தால், அவர்கள் இன்னும் ஆவேசமாக விளையாடுவார்கள், தோல்வி உறுதியாகிவிடும்.

அதிலும், கேப்டன் விராட் கோலியை ஆஸி. வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்தால், அவரை இன்னும் சிறப்பாக விளையாடச் செய்துவிடும்.

அதற்குப்பதிலாக பேட்டிங்கில் கோலி எந்தப் பகுதியில் பலவீனமாக இருக்கிறார் என்று கண்டுபிடித்து அங்கு பந்துவீச்சாளர்கள் பந்து வீசலாம். குறிப்பாக கோலிக்கு கவர் திசையில் பந்துவீசக்கூடாது. மாறாக வேறு திசையில் பந்துவீசி நெருக்கடி அளிக்கலாம்.தற்போது முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது: டீன் ஜோன்ஸ் 4

கடந்த 1986-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஆஸி. அணி பயணம் செல்லும்போது அணியில் அனுபவம் இல்லாத வீரர்களே அதிகம் இருந்தார்கள், ஆலன் பார்டர், பாப் சிம்சன் ஆகிய இரு ஜாம்பவான்கள் மட்டுமே இருந்தார்கள். எதிரணியை நினைத்து வீரர்கள் அதிகமாக கவலைப்படவில்லை.

தங்களுக்குள் மட்டுமே கவலைகளைப் பேசிக்கொண்டனர். ஆலன் பார்டரும், சிம்ஸனும் ஒவ்வொரு வீரருடனும் தனிப்பட்ட முறையில் பேசி, அவர்களுக்கு ஊக்கம் அளித்து சிறப்பாகச் செயல்பட வைத்தார்கள். சில வாரங்களில் ஆஸி. அணி நன்றாக விளையாடத் தொடங்கியது. போட்டியின் யுத்திகள் சிறப்பாகச்செயல்பட்டன. பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் அனைத்து வீரர்களும் நன்கு ஒத்துழைத்தனர்”.

இவ்வாறு டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *