பெரேரா இலங்கை பயணம் 1
CANTERBURY, ENGLAND - JULY 18: Thisara Perera of Gloucestershire (2nd L) celebrates with teammates after taking the wicket of Daniel Bell-Drummond of Kent Spitfires during the NatWest T20 Blast South Group match at The Spitfire Ground on July 18, 2017 in Canterbury, England. (Photo by Sarah Ansell/Getty Images). *** Local Caption *** Thisara Perera

கவுன்ட்டி அணியில் பெரேரா :

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா. அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 தொடரில் பங்கு பெற்று குளோசிஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி வருகின்றார். அந்த அணியின் கவுன்ட்டி அணியிலும் இடம் பெற்றுள்ளார் திசாரா பெரேரா. இப்போது இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

பெரேரா இலங்கை பயணம் 2
CANTERBURY, ENGLAND – JULY 18: Thisara Perera of Gloucestershire (2nd L) celebrates with teammates after taking the wicket of Daniel Bell-Drummond of Kent Spitfires during the NatWest T20 Blast South Group match at The Spitfire Ground on July 18, 2017 in Canterbury, England. (Photo by Sarah Ansell/Getty Images). *** Local Caption *** Thisara Perera

இலங்கையின் பரிதாபம் :

2017ஐ தென்னாப்பிரிக்கா உடன் ஒரு நாள் தொடரை 5 – 0 என்ற கணக்கில் மறுபடியும் மொதல்ல இருந்தா என தொடங்கி இன்னும் அந்த சனி அவர்களை விட்ட பாடில்லை. அதே இடத்தில் வைத்து டி20 போட்டியிலும் 3 – 0 என்ற கணக்கில் நசுக்கப்பட்டது. மேலும் பங்களாதேஷ் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் வென்று அந்த அணிக்கு சோகத்தை ஏற்ப்படுத்தியது. அது போக சாம்பியன்ஸ் டிராபி முதல் சுற்றிலேயே வெளியே வந்தது.

பெரேரா இலங்கை பயணம் 3

சமீபத்தில் ஜீம்பாப்வே அணியுடனான 5 போடிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-2 என்ற வெற்றிக் கணக்கில் தோற்றது. அதன் பிறகு கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது.

ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் சொந்த மண்ணில் முதன் முறையாக 3 – 0 என்ற கணக்கில் மன்னைக் கவ்வியது. இந்திய இலங்கையில் சுற்றுப்  பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

பெரேரா இலங்கை பயணம் 4

சொந்த மண்ணிலயே இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படு தோல்வி அடைந்து உள்ளது என்பது குறிப்பிட்ட தக்கது.

இதனை தொடர்ந்து இந்தியா இலங்கை அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இதுபோன்ற அடுத்தடுத்த தோல்விகளினால் துவண்டு போய் உள்ளது இலங்கை அணி. அதன் காரணமாகா இந்தியாவுடனான ஒரு நாள் தொடரையும் இழந்து விட கூடாது என அனுபவம் வாய்ந்த வீரர்களை அணிக்கு திரும்பியுள்ளது.   தற்போது இலங்கையில் கிரிக்கெட் வாரியம் அவசரமாக அவரை இலங்கைக்கு வர பணித்ததன் பேரில் அவசர அவசரமாக அவர் இலங்கை பயணம் செய்துள்ளார். மேலும் அவரை உடனடியாக இலங்கையின் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

Cricket, Kuldeep Yadav, Ravindra Jadeja, India, Sri Lanka

இதனால் குளோசிஸ்டர்ஷயர் அணி ஏமாற்றம் அடைந்தனர். ஏனென்றால் ஏற்கனவே காயம் காரணமாக விளகிய ஆஸ்திரேலியாவின் கேமரான் பான்க்ராப்ட்டிற்குப் மாற்றாக தான் திசாரா பெரேரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் இப்போது தனது நாட்டு அணிக்காக அணியை விட்டு செல்வதால் குளோசிஸ்டர்ஷயர் அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.

இதனால் வருத்தம் அடைந்த குளோசிஸ்டர்ஷயர் அணி நிர்வாகம் ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பான்க்ராப்டை மீண்டும் அணிக்காக ஆட அழைப்பு விடுத்துள்ளது. அவர் முன்னரே எங்கள் குளோசிஸ்டர்ஷயர் அணிக்காக நன்றாக ஆடி ரன்களை குவித்தவர். அவரை அணிக்கு மீண்டும் அழைப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *