நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டு அந்த அணியின் டி20 அணிக்கு மட்டும் டிம் சவுதி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக டிம் சவுதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மூன்று அணிக்கு கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி20 அணிக்கு மட்டும் டிம் சவுதி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த நியமனம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
.14 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
டி20 அணி: டிம் சவுதி (சி), டாட் ஆஸ்டல், டாம் புரூஸ், கொலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், ஸ்காட் குகலீஜ்ன், டேரில் மிட்செல், கொலின் மன்ரோ, சேத் ரான்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சீஃபர்ட் (வார), இஷ் சோதி, ரோஸ் டெய்லர் .

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி அதிகாரிகள் இதுகுறித்து நியூசிலாந்து அணி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார். இன்னும் 14 நாட்களுக்குள் கேன் வில்லியம்சன் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்பட்டு சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தடைக்குள்ளாவார் என்று ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கான முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம்.
அதேபோல் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயாவும் முரண்பாடாக பந்து வீசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆறு விக்கெட் வீழ்த்தினார். முன்னணி பந்து வீச்சாளர் என்பதால் இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.