டிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்! 1
Ravichandran Ashwin's Dindigul Dragons will take on Ruby Trichy Warriors in the inaugural fixture of the third edition of the Tamil Nadu Premier League at Tirunelveli on July 11. The final of TNPL 2018 will take place in Chennai at the M.A Chidambaram Stadium on August 12.

ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, விளையாட்டு ரசிகர்கள் தொடர்ந்து பிஸியாகவே இருந்து வருகின்றனர். ஐபிஎல் முடிந்த பிறகு, ஃபிபா உலகக் கோப்பையை கொண்டாடி வரும் ரசிகர்களை அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகும் வகையில் நாளை (ஜூலை 11) தொடங்கவுள்ளது டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டி20 கிரிக்கெட் தொடர், வெற்றிகரமாக தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் சீசனில், டூட்டி பாட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இரண்டாவது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் என்னவொரு ஆச்சர்யம் எனில், முதல் சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி டூட்டி பாட்ரியாட்ஸ். இரு சீசனிலும் இவ்விரு அணிகளின் ஆதிக்கம் தான் அதிகம்.டிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்! 2

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர், நாளை தொடங்கி ஆகஸ்டு 12ம் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.

இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. மாலை 3.15 மணி, இரவு 7.15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2-வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது.டிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்! 3

நெல்லையில் 11ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று (ஜூன் 9) தொடங்கியது. டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை போன்றே ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

எட்டு அணிகளில் உள்ள வீரர்களின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்,

ஐட்ரீம் காரைக்குடி காளை:

தினேஷ் கார்த்திக், அனிருதா, வி. யோ மகேஷ். ஆர் கவின், எல் சூர்யப் பிரகாஷ், லக்ஷ்மண், ஆதித்யா.வி, கிஷன் குமார் எஸ், ராதாகிருஷ்ணன், மான் கே பாஃனா, அஷ்வத் முகுந்தன், சுவாமிநாதன். எஸ், அஜித் குமார் டி, எஸ் கணேஷ், ஆர் ஸ்ரீனிவாசன், பி முருகேஷ்.

திண்டுக்கல் டிராகன்ஸ்:

சதுர்வேத் என்.எஸ், ஹரி நிஷாந்த் சி, அனிருத் சீதா ராம், மொஹம்மத் எம், ரோஹித் ஆர், ஆதித்யா அருண், அபினவ் எம், சிலம்பரசன், திரிலோக் நாக், யாழ் அருண் மொழி, சுஜேந்திரன் எம், கௌஷிக் ஜே, என் ராமகிருஷ்ணன், ரா அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் எம் தோத்தாரி.

டிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்! 4

காஞ்சி வீரன்ஸ்:

லோகேஷ்வர் எஸ், விஷால் வைத்யா.கே, ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், சுப்ரமணிய சிவா, முகிலேஷ் யு, சுனில் சாம், எஸ் அருண், தீபன் லிங்கேஷ் கே, பிரான்சிஸ் ரோகின்ஸ் பி, சித்தார்த் எஸ், திவாகர் ஆர், மோகித் ஹரிஹரன்,எஸ் சந்திரசேகர், எஸ் அஷ்வத், யு விஷால், ஸ்ரீராம் சி.

திருச்சி வாரியர்ஸ்:

சோனு யாதவ், சஞ்சய் எம்எஸ், முரளி விஜய், சி.கணபதி, சுரேஷ் குமார் எஸ், வசந்த் சரவணன், அரவிந்த் எஸ், லக்ஷ்மி நாராயணன் எம், விக்னேஷ் எல், சந்திரசேகர், அஷ்வின் கிரிஸ்ட், மணி பாரதி கே, சரவண குமார் பி, ஏஎஸ் கோவிந்த ராஜன், ஆர்எஸ் திலக், வி ஆகாஷ்.டிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்! 5

மதுரை பாந்தர்ஸ்:

வருண் சிவி, அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, தலைவன் சற்குணம், கௌஷிக், ஜகன்னாத், நிலேஷ், ரோஹித், எஸ்.பி.நாதன், துஷார் ராஹெஜா, கிரண் ஆகாஷ் எல், லோகேஷ் ராஜ், எஸ்எஸ் கர்னவர், விக்ரம் ஜாங்கிட், எம்எஸ் புரமோத், பிஎஸ் சிவராமகிருஷ்ணன்.

லைகா கோவை கிங்ஸ்:

ஆண்டனி தாஸ், நடராஜன் டி, அபினவ் முகுந்த், கே.விக்னேஷ், ஷாருக் கான் எம், அகில் ஸ்ரீநாத், சுரேஷ் குமார் ஜே, மிதுன் ஆர், சுரேஷ் பாபு, சுமந்த ஜெயின், ராஜேஷ் எம்பி, அஷ்வின் வெங்கடராமன், எம்.ராஜா, ஆர் சத்யநாராயணன், மொஹம்மத் அட்னன் கான், எஸ் மணிகண்டன்டிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்! 6

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

விஜய் ஷங்கர், கோபிநாத் கே ஹெச், எம்.அஷ்வின், ஹரீஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜு, சன்னி குமார் சிங், சம்ருத் பட், அருண் குமார் வி, விஷால் ஆர், ராகுல் பி, சித்தார்த் எம், அருண் பி, ஆரிஃப், எம் கே சிவகுமார், மனவ் பரக், சாய் சுதர்சன்.

டூட்டி பாட்ரியாட்ஸ்:

வாஷிங்டன் சுந்தர், கௌஷிக் காந்தி, சாய் கிஷோர் ஆர், ஆர்.சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன், அக்ஷய் ஸ்ரீனிவாசன், மாலோலன் ரங்கராஜன், ஆஷித் ராஜீவ், யு.சுஷில், தினேஷ் எஸ், அபிஷேக் எஸ், வெங்கடேஷ் ஏ, நிதிஷ் எஸ், ஆர் ஜேசுராஜ், எஸ் பூபாலன், எஸ் ஷுபம் மேஹ்தா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *