சர்வதேச டி20 போட்டி 2005ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை பிரமாண்டமாக நடந்து வருகிறது. டி20 போட்டிகள் அறிமுக படுத்திய சில நாட்களிலேயே கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்தது. டி20 கிரிக்கெட் என்றாலே அது பேட்ஸ்மேனின் கேம் என்று நாம் அனைவருக்குமே தெரியும். இது வரை டி20 போட்டிகளில் பல வீரர்கள் விளையாடி இருக்கிறார்கள். அதில் அதிக ரன் அடித்துள்ள டாப் 10 வீரர்களை இப்போது பார்ப்போம்.
ஏபி டி வில்லியர்ஸ் – 1672
தென்னாபிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இது வரை 78 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1672 ரன் அடித்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 79* ஆகும்.
உமர் அக்மல் – 1690
பாகிஸ்தான் அணியின் உமர் அக்மல் 2009ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகி 82 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் 1690 ரன் அடித்துள்ள அக்மல் அதிகபட்சமாக 94 ரன் அடித்திருக்கிறார்.
ஜேபி டுமினி – 1700
தென்னாபிரிக்கா அணியின் இடது கை வீரர் ஜீன் பால் டுமினி 2007ஆம் ஆண்டு அறிமுகம் ஆகி 73 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1700 ரன் சேர்த்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 96* ஆகும்.
டேவிட் வார்னர் – 1713
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் இது வரை 69 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2009ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் அதிகபட்சமாக 90* ரன் அடித்திருக்கிறார்.
முகமது ஷேசாத் – 1816
ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத் 60 போட்டிகளில் விளையாடி 1816 ரன் அடித்து இந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். சர்வதேச டி20 போட்டியில் அவர் ஒரு சதமும் அடித்திருக்கிறார். அவரது அதிகபட்ச ரன் 118* ஆகும்.
ஷோயப் மாலிக் – 1821
2006ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் 92 போட்டிகளில் விளையாடி 1821 ரன் அடித்திருக்கிறார். டி20I கிரிக்கெட்டில் அவர் அதிகபட்சமாக 75 ரன் அடித்திருக்கிறார்.
திலகரத்னே டில்ஷான் – 1889
இலங்கை அணியின் தொடக்கவீரர் திலகரத்னே டில்ஷான் 2006ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகம் ஆகி 1889 ரன் அடித்திருக்கிறார். 80 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், அதிகபட்சமாக 104* ரன் அடித்திருக்கிறார்.
விராட் கோலி – 1956
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 55 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1956 ரன் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 90* ஆகும்.
பிரண்டன் மெக்கல்லம் – 2140
நியூஸிலாந்து அணியின் அதிரடி தொடக்கவீரர் பிரண்டன் மெக்கல்லம் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இந்த பட்டியலில் 2140 ரன்னுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
மார்ட்டின் குப்தில் – 2188
நியூஸிலாந்து அணியின் மற்றொரு தொடக்கவீரர் மார்ட்டின் குப்தில் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது தனது இரண்டாவது சதம் அடித்து, இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.