கெமார் ரூச் 152.7 கி.மீ
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெயர்போன நாடான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து வந்தவர் இவர். கிட்டத்தட்ட ஆறடி உயரம் கொண்டவர். எப்போதும் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்தை வீசிக் கொண்டே இருப்பார். கடந்த 209ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடரில் 152.7 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். தற்போது 36 வயதாகிறது. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.