போட்டியை அப்படியே தலைகீழாக மாற்றிய 10 சிறந்த ஆட்டங்கள்

கிரிக்கெட் என்பது ஒரு அணியாக விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்தாலும் பல நேரங்களில் அணியில் ஒரு வீரரின் சிறப்பான ஆட்டமே போட்டியை வெல்ல போதுமானதாக இருக்கிறது. கிரிக்கெட் துவங்கிய கால்த்தின் டொனால்டு ப்ராட்மேனில் துவங்கி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், தோனி என தற்போது பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா வரை சிங்கில் ஹேண்டில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைதுச் செல்வதில் வல்லவர்கள்.

தற்போது கிரிக்கெட் துவங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை போட்டியில் ஒரே ஒரு சிறந்த ஆட்டத்தினால் தங்களது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற வீரர்களையும் அப்படியான அருமையான 10 ஆட்டத்தினையும் பார்ப்போம்.

10.ப்ரூஸ் மிட்ச்செல்

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 4ஆவது போட்டியையும் வெற்றி பெற்றி தென்னாப்பிரிக்க அணியை மண்ணைக் கவ்வ வைக்க முடிவெடுத்து ஆடியது. இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கவிற்கு 451 ரன் என்ர இமாலய இலக்கை வைத்து ஆட வைத்தது இங்கிலாந்து.

அந்த சமயத்தில் அந்த போட்டியில் தோல்வியைத் தவிற்க கடுமையாக போராடிய ப்ரூஸ் மிட்செல் 189* ரன் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 451 ரன்னை எட்டியிருக்கு வேண்டியது தென்னாப்பிரிக்க அணி. ஆனால், 5வது நாள் ஆட்ட நேரமுடிவில் 423 ரன் எடுத்து 7 விக்கெட் இழந்து போட்டியை ட்ரா செய்தது தென்னாப்பிரிக்கா.

இரண்டாவது இன்னிங்சில் 189* ரன் அடித்தது மட்டுமில்லாமல், முதல் இன்னிங்சிலும் 120 ரன் அடித்துள்ளார். 5 நாள் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே மைதானத்திற்கு வெளியே இருந்துள்ளார். 5 நாட்களும் பேட்டிங் அல்லது ஃபீல்டிங் என மைதானத்திலேயே இருந்துள்ளார் ப்ரூஸ் மிட்செல்.

 

9.ரிக்கி பாண்டிங்

2005ல் நடந்த ஆசஷ் தொடர் அது. கிட்டத்தட்ட ஆசஸ் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஆசஸ் தொடர் எனக் கூட சொல்லலாம். அந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெறும் 2 ரன்னில் ஆஸ்திரேலியாவை த்ரில்லிங்காக தோற்க்கடித்தது. பின்னர் 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு 423 ரன்கள் டார்கெட் வைத்தது இங்கிலாந்து அணி.

கடைசி நாள் ஆட்டம் அது. ரிக்கி பாண்டிங் நாள் முழுவது ஆடுகிறார். நாள் முழுவது ஆடி 156 ரன் சேர்க்கிறார் பாண்டிங். எப்படியாவது இந்த டெஸ்ட் போட்டியை ட்ரா செய்து விட வேண்டும் என ஆடிய அவர், சரியாக 5ஆவது நாள் ஆட்ட நேரம் முடிய 4 ஓவர்கள் மீதள் உள்ள நிலையில் ஆட்டம் இழக்கிறார். அது ஆஸ்திரேலியாவின் 9ஆவது விக்கெட் ஆகும். பின்னர் மீதம் இருந்த 4 ஓவர்களை க்லென் மெக்ராத் மற்றும் ப்ரெட் லீ சேர்ந்து ஆடி போட்டியை ட்ரா செய்கின்றனர்.

8.அலைஸ்டர் குக்

இதுவும் ஒரு ஆசஷ் தொடர் தான். 2010-11 ஆம் ஆசஸ் தொடர் இது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 221 ரன் பிந்தங்கிய நிலையில் இருந்தது. செய்வதறியாது திகைத்த இங்கிலாந்து அணிக்கு உதவியது குக் தான்.

அந்த போட்டியில் குக் 235 ரன் குவிக்க இங்கிலாந்து 517 ரன் அடித்து டிக்ளேர் செய்தது. இந்த போட்டியை குக் மூலம் ட்ரா செய்தது இங்கிலாந்து அணி. இந்த டெஸ்ட் போட்டியில் குக் மட்டும் 625 நிமிடங்கள் பேட்டிங் செய்துள்ளார். இந்த மொமன்டத்தைப் பிடித்த இங்கிலாந்து அணி அப்படியே அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை வென்று அந்த வருட ஆசஷ் கோப்பையையும் மீட்டது.

7.டென்னிஸ் அமீஸ்

இங்கிலாந்திற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் நடந்த டெஸ்ட் போட்டி இது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இன்டீஸ் அணியை விட 230 ரன் பின் தங்கிய நிலையில் இருந்தது. இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் தள்ளாடி வந்தது இங்கிலாந்து. ஆக்ரோச பந்து வீச்சாளர்களைக் கொண்டது அப்போதைய வெஸ்ட் இன்டீஸ் அணி. அந்த அணியின் பந்து வீச்சையும் சமாளித்து 5ஆவது நாள் இறுதி வரை இங்கிலாந்து அணியை அழைத்து சென்று போட்டியை ட்ரா செய்தார் அமிஸ். இந்த போட்டியில் 262* ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தால் அவர். மேலும், இங்கிலாந்தில் இரண்டாவது இன்னிங்சில் 570 நிமிடங்கள் பேட்டிங்க் செய்துள்ளார் டென்னிஸ். இறுதியாக 432 ரன்னிற்கு 9 விக்கெட்டுளை இழந்து போட்டியை ட்ரா செய்தது இங்கிலாந்து.

6.ஃபாஃப் டூ ப்ளெஸ்சிஸ்

இந்த போட்டி நாம் கண் கூடாகப் பார்த்த டெஸ்ட் போட்டி. வேகப்பந்திற்கு சாதகமான அடிலெய்டு ஆடுகளத்தில் 414 ரன் இலக்காக வைத்தது ஆஸ்திரேலியா. அந்த போட்டியில் தான் தனது அறிமுக டெஸ்ட் ஆடுகிறார் ஃபாஃப். இன்னும் 4 செசன் இருக்கிறது. போட்டியை ட்ரா செய்து விட எண்ணிய தென்னாப்பிரிக்க அணிக்கு அற்புதமாக கைத்கொடுத்தார் அறிமுக வீரர் ஃபாஃப் டூ ப்ளெஸ்சிஸ். 5ஆவது நாள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் 110 ரன் அடித்தார்.

during day five of the Second Test Match between Australia and South Africa at Adelaide Oval on November 26, 2012 in Adelaide, Australia.

மேலும், ஏ.பி.டி வில்லியர்சும் இந்த போட்டியில் அசத்தினார், அவர் 220 பந்துகளுக்கு வெறும் 33 ரன் மட்டுமே அடித்து அவரால் இப்படியும் ஆட முடியும் என மலைக்க வைத்தார்.

5.ஆண்டி ப்ளார்

தற்போதைய ஜிம்பாப்வே அணியை விட கடந்த 20 வருடங்களுக்க முன் இருந்த ஜிம்பாப்வே அணி பெரிய அணிகளுக்குக் கூட சிம்ம சொப்பனமாக விளங்கியது. அந்த அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ஆண்டு ப்ளார். 2000ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டி அது. இந்தியாவை விட 227 ரன் பின் தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் செய்து இரண்டாவது இன்னிகங்சிலும் 61 ரன்னிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது ஜிம்பாப்வே அணி. அந்த டெஸ்ட் போட்டியில் 444 பந்துகளுக்கு 232 ரன் அடித்து போட்டியை ட்ரா செய்தான் ஆண்டி ப்ளார். இந்த போட்டியில் பேட்டிங்கில் மட்டும் 544 நிமிடங்கள் களத்தில் இருந்துள்ளார். இவர் அடித்த 232 ரன் இன்று வரை ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிக ரன் என்ற சாதனையாக இருக்கிறது.

4.மைக் அதெர்டன்

இங்கிலாந்து அணி 479 ரன்களை செய்ய வேண்டி இருந்தது. இன்னும் ஒன்றரை நாட்கள் மீதம் இருக்கிறது. ஒன்று இங்கிலாந்து 479 ரன்னை அடிக்க வேண்டும் அல்லது 160 ஓவர்கள் களத்தில் நின்று ட்ரா செய்ய போராட வேண்டும். அந்த பணியை தன் கையில் எடுத்தார் மைக் அதெர்டன். ஓப்பனிங் இறங்கிய அதெர்டன் மொத்தம் 492 பந்துகளை சந்தித்து 185 ரன்களை அடித்து அந்த டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தார். இந்த மாரத்தன் பேட்டிங்கில்  643 நிமிடங்கள் பேட்டிங் பிடிக்க மட்டும் களத்தில் இருந்தார் மைக்.

3.கௌதம் கம்பிர்

நியூசிலாந்து அணி அசுரத்தனமாக முதல் இன்னிங்சில் 619 ரன் குவித்து வைத்தது. பின்னர் ஆடிய இந்திய் அணி முதல் இன்னிங்சில் 305 ரன்னிற்கு ஆல் அவுட் ஆக, ஃபாலோ ஆன் செய்து ஆடியது. ஓப்பனிங் இறங்கிய கௌதம் கம்பிர் 160 ஓவர்களுக்கு களத்தில் நின்று 137 ரன் அடித்து இந்திய அணிக்கு அந்த டெஸ்ட் போட்டியை ட்ரா செய்து கொடுத்தார். மேலும், அந்த போட்டியில் ராகுல் ட்ராவிட் 220 பந்துகளுக்கு 62 ரன்னும், சச்சின் டெண்டுல்கர் 131 பந்துகளுக்கு 61 ரன்னும், லட்ச்சுமனன் 212 பந்துகளுக்கு 124 ரன்னும் அடித்து ஆட்டத்தை ட்ரா செய்ய உதவினர்.

2.ப்ரெண்டன் மெக்கல்லம்

இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் நடந்த டெஸ்ட் அபொட்டி இது. முதல் இன்னிங்சில் 246 ரன் லீட் வைத்து டெஸ்ட் போட்டியை வெல்ல பயணித்துக்கொண்டிருந்தது இந்திய அணி.94 ரன்னிற்கு 5 விக்கெட்டுக்லை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது நியூசிலாந்து அணி. 6வது விக்கெட்டிற்கு இறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் இந்திய பந்து வீச்சாளர்களை ருத்ர தாண்டவம் ஆடினார். அற்புதமாக ஆடிய மெக்கல்லம் 557 பந்துகளில் முச்சதம் கண்டு இந்திய வீரர்களை திணறடித்து போட்டியை ட்ரா செய்தார்

1.ஹனீஃப் முகமது

சொல்லப்போனால் இது கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அற்புதமான ஒரு ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டியை ட்ரா சேட்டை 970 நிமிடங்கள் பேட்டிங் செய்துள்ளார் பாகிஸ்தானின் ஹணிப் முகமது. 473 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் செயத  பாகிஸ்தான் அணிக்கு, தொடர்ந்து 979 நிமிடங்கள் பேட்டிங் செய்து 337 ரன் குவித்து போட்டியை ட்ரா செய்து வரலாற்றில் இடம் பிடித்தார் ஹனிப் முகமது.

மேலும், இந்த போட்டியில் சுவாரஸ்யமான் விசயம் என்னெவென்றால், இந்த டெஸ்ட் போட்டி வெஸ்ட் இன்டீஎசில் நடந்தது. மைதானத்திற்கு வெளியே உள்ள மரத்தில் உட்கார்ந்தபடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரசிகர் ஒருவர் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொது தீடீரென எதிர்பாராரத் அவிதமாக மரத்தில் இருந்து கீழே விழ, மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில் அவர் கேட்ட முதல் கேள்வி ‘இன்னும் முகமது ஹனீஃபா களத்தில் நிற்கிறாரா? ‘ என்பது தான். பக்த்தில் இருந்தவர்கள் அவுட் ஆகவில்லை எனக் கூற மீண்டும் மயக்க நிலையை அடைகிறார் அந்த ரசிகர்.

Editor:

This website uses cookies.