Use your ← → (arrow) keys to browse
1.எம்.எஸ்.தோனி (இந்தியா) – 39 டிஸ்மிஷல்ஸ்
36 வயதாகிவிட்டது என இவரது ஹேட்டார்கள் கூப்பாடு போட்டு கதறினாலும் இவர் தன்னை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். இவருக்கும் இரண்டாம் இடத்தில் இருப்பவருக்கும் 9 டிஸ்மிஷல் வித்யாசம் இருக்கிறது. இந்த வயதிலும் ஒரு கீப்பராக இருக்க தேவையான அனைத்து தகுதிகளும் இவரிடத்தில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. 2017ல் மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள எம்.எஸ் தோனி 39 டிஸ்மிஷல்ஸ் செய்துள்ளார். இதில் 26 கேட்சும் 13 ஸ்டம்பிங்கும் அடங்கும். இந்த பட்டியலில் உள்ள எந்த இரு விக்கெட் கீப்பரும் அதிகபட்சமாக 5 ஸ்டம்பிங்கை தாண்டவில்லை. ஆனால் தோனி செய்ததோ 13 ஸ்டம்பிங்.
Use your ← → (arrow) keys to browse