3.இந்தியா – 381/6 VS இலங்கை
இந்த வருட துவக்கத்தில் கட்டாக் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 25 ரன்னிற்கு 3 விக்கெட்களை இழந்து திணறி வந்தது.
பின்னர் 4ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இந்திய அணியின் அசாத்திய வீர்ரகள் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் 256 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய அணியின் ஸ்கோரை 381ஆக உயர்த்தினர். இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் 150 ரன்களும் தோனி 137 ரன்களும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி 15 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே இந்த வருடத்தின் மூன்றாவது அதிகபட்ச ரன் ஆகும்.