பெங்களூருவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்த டெஸ்டில் அஷ்வின் 2வது விக்கெட்டை வீழ்த்திய போது, இந்திய அணி சார்பில் டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையை பெற்றார். இப்போட்டிக்கு முன், அஷ்வின் 57 டெஸ்ட் போட்டியில், 311 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இன்றைக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவரது எண்ணிக்கை 315-ஆக உயர்ந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், 311 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார்.
5.ஜாகிர் கான் – 311 விக்கெட்டுகள்
இந்த பட்டியலில் ஜாஹிர் காண 5வது இடத்தில் உள்ளார். மொத்தம் 92 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளா ஜாகிர் கான் 311 விக்கெடுகள் வீழ்த்தியுள்ளார்.
11 முறை 5 விக்கெட்டுகளும், 1 முறை 10 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்து வீச்சு – 7/87