1.தோனி – 5 கேட்ச்
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ஜேசன் ராய் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹேல்ஸ் (30), மோர்கன் (6), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.
இந்த மூன்று பேரையும் எம்எஸ் டோனிதான் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அத்துடன் சித்தார்த் கவுல் பந்தில் பிளங்கெட்டை (9) கேட்ச் பிடித்து வெளியேற்றினார். மொத்தம் இங்கிலாந்து இழந்த 9 விக்கெட்டில், 5 விக்கெட்டை கேட்ச் மூலமாகவும், ஒரு விக்கெட்டை ரன்அவுட் மூலமாகவும் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு டி20 போட்டியில் 5 கேட்ச்கள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.