4.இந்தியா – 50 வெற்றிகள்
ஐ.பி.எல் என்ற டி20 லீக்கின் வளர்ச்சியினால் உலக கிரிக்கெட்டின் அதிகாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணி இந்தியா. இந்த லீக் துவகுவதற்க்கு முன்னர் 2007ல் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி. ஆனால், அதற்கு பின்னர் உருவான ஐ.பி.எல் போட்டியினா ஒரு டி20 உலகக்கோப்பையைக் கூட பெற்றுத் தர இயலவில்லை என்பதே நிதர்சனம். இந்திய 2006ல் இருந்து சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி வருகிறது. மொத்தம் 85 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள இந்திய அணி 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கணிசமான ஆட்டங்களில் எல்லாம் வென்றுள்ளது இந்திய அணி. இதனைப் பார்க்கும் போது இந்திய அணி சற்று அபாரமாகத் தான் செயல்பட்டு வருகிறது.
- போட்டி – 85
- வெற்றி – 50
- தோல்வி – 32
- டையில் முடிந்தது – 1
- முடிவு இல்லை – 2
- வெற்றி தோல்வி விகிதம் – 1.562
- அதிகபட்ச ரன் – 244
- குறைந்தபட்ச ரன் – 74