கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்):

‘சிக்சர் மன்னன்’ என்ற அடைமொழியோடு வலம் வரும் 39 வயதான கிறிஸ் கெய்ல் இந்த உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார். பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்துவதே தனது லட்சியம் என்று அடிக்கடி கூறும் கெய்ல் எதிரணி பந்துவீச்சை நொறுக்கித்தள்ள காத்திருக்கிறார். உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையை டிவில்லியர்சுடன் இணைந்து கெய்ல் (37 சிக்சர்) பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.