டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா):

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தாலும் டேவிட் வார்னரின் ஆட்டத்திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால் முன்பை விட இப்போது இன்னும் ஆக்ரோஷமாக ஆடுகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் (ஒரு சதம், 8 அரைசதத்துடன் 692 ரன்) முதலிடம் பிடித்த வார்னர், தனது சீரிய பங்களிப்பின் மூலம் இந்த உலக கோப்பையை சொந்தமாக்கி தவறுகளுக்கு பரிகாரம் தேடும் முனைப்புடன் உள்ளார்.